7. கானல்வரி




80




85

[ 10 ]

வலைவாழ்நர் சேரி வலையுணங்கு முன்றின்
    மலர்கை யேந்தி
விலைமீன் உணங்கற் பொருட்டாக
    வேண்டுருவங் கொண்டு வேறோர்
கொலைவேல் நெடுங்கண் கொடுங்கூற்றம் வாழ்வது
அலை நீர்த்தண் கானல் அறியேன் அறிவேனேல்
    அடையேன் மன்னோ.



79
உரை
85

         வலை வாழ்நர் சேரி வலை உணங்கும் முன்றில் - வலை வளததா வாழ்பவருடைய சேரியில் வலை உலரும் முற்றத்திலே, மலர் கை ஏந்தி - பூங்கொம்பைக் கையில் ஏந்தி, விலை மீன் உணங்கற் பொருட்டாக - விற்றற்குரிய மீன் வற்றல் புலர்வதனைக் காத்தற் பொருட்டாக, வேண்டுருவம் கொண்டு - தான் வேண்டிய வடிவங் கொண்டு, வேறு ஓர் கொலை வேல் நெடுங் கட் கொடுங் கூற்றம் வாழ்வது - கொலைத் தொழில் பொருந்திய வேல் போலும் நீண்ட கண்களையுடைய வேறொரு கொடிய கூற்றம் வாழ்வதனை, அலைநீர்த் தண் கானல் அறியேன் - அலைகின்ற நீரையுடைய குளிர்ந்த கானலிடத்தே அறியேன், அறிவேனேல் அடையேன் மன்னோ - அறிவேனாயின் ஆண்டுச் செல்லேன் ;

         உணங்கலைக் காத்தற் பொருட்டாக வென்க. உலகத் துயிர்களைக் கொள்ளும் கூற்றமன்றி, என்னுயிரைக் கவர்தற்கு நிற்கும் வேறோர் கூற்றமென்றானென்க. வேறோர் கூற்றம் நெடுங்கண்ணையுடைய வேண்டுருவங் கொண்டு வாழ்வது என்றியைத்தலுமாம். கூற்றம் வேண்டுருவங் கொண்டு கானலிடத்து வாழ்வதனை அறியேன், அறிவேனேல் ஆண்டு அடையேன் என்க. இதன் துறையும் மேற்கூறியதே. இம் மூன்றும் 7. கானல்வரி.