| நாமகள் இலம்பகம் | 
100  | 
  | 
| 
 வாடுதல் போன்ற நிலமகளிரின் இயல் கண்டும் ஐயுறாமல் தெய்வமகளெனவே உட்கொண்டு ஒழுகினான். 
 | 
  | 
| 
    (வி - ம்.) மழலை - எக்காலத்திற்குங் கூறுப. 
 | 
( 152 ) | 
வேறு
 | 
  | 
|  182 | 
வண்டின முகபடா மணிந்து வார்மத |  
|   | 
முண்டுகுத் திடுகளிற் றுழவன் றன்மகள் |  
|   | 
பெண்டிர்தம் பெருநலங் கடந்து பெற்றபோ் |  
|   | 
விண்டலர் கோதைக்கு விசயை என்பவே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) வண்டுஇனம் முகபடாம் அணிந்து - வண்டின் திரளாகிய முகபடாத்தை அணிந்து; வார்மதம் உண்டு உகுத்திடு களிற்று உழவன் தன் மகள் விசயை என்ப - ஒழுகும் மதத்தைத் தானே உண்டு சிந்தும் களிற்றையுடையவன் மகள் பெயர் விசயை என்பர்; விண்டு அலர் கோதைக்குப் பெண்டிர்தம் பெருநலம் கடந்து பெற்றபேர் - அரும்பு நெகிழ்ந்து மலரும் கோதையாட்கு அப்பெயர் பிற மங்கையரின் அழகினை வென்று பெற்ற காரணப் பெயராகும். 
 | 
  | 
| 
    (வி - ம்.) பெயர் பேரென மருவிற்று. [களிற்றுழவன்- களிற்றால் (போர்த்) தொழில் செய்வோன்.] 
 | 
  | 
| 
    விசயை - வெற்றியுடையோள். பெண்மையாலும் அழகானும் உலகிலுள்ள மகளிரை எல்லாம் வென்றவள் என்பதுபற்றி விசயை என்னும் பெயர் பெற்றனள் என்பது கருத்து. 
 | 
( 153 ) | 
|  183 | 
அருமணி மரகதத் தங்க ணாறிய |  
|   | 
வெரிநிறப் பொன்னித ழேந்து தாமரைத் |  
|   | 
திருமக ளிவளெனத் திலக வெண்குடைப் |  
|   | 
பெருமகன் கோயிலுட் பேதை வைகுமே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) அருமணி மரகதத்து அங்கண் நாறிய - அரிய மணியாகிய மரகதப் பாறையில் பதுமையென்னும் பொய்கையில் தோற்றிய; எரிநிறம் பொன்இதழ் ஏந்து தாமரைத் திருமகள் இவள்என - நெருப்பின் நிறத்தையுடைய பொன்னி தழ்களையுடைய தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் இவளென்னுமாறு; திலகம் வெண்குடைப் பெருமகன் கோயிலுள் - மேலான வெண்குடையையுடைய விதைய மன்னன் அரண்மனையிலே; பேதை வைகும் - விசயை இருந்தாள். 
 | 
  | 
| 
    (வி - ம்.) திலகம் -மேலாதல். திருஉவமம், வடிவிற்கும் நல்வினையுடையோனிடத்து ஏகுந்துணையும் பொதுவாய் இருத்தற்கும். 
 | 
  |