பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1000 

1754 னல்வனப் புடைய தேவி
  திலோத்தமை பெற்ற நம்பி
செல்வன்மற் றுலோக பாலன்
  றிருமகள் பதுமை யென்பாள்.

   (இ - ள்.) வெல் களிற்று அச்சம் நீக்கி - இவ்வாறு களிறுகளுற்ற அச்சத்தைப் போக்கி; விரைவொடு வனத்தின் ஏகி - விரைந்து வனத்தைக் கடந்து சென்று; பல்லவ தேயம் நண்ணி - பல்லவ நாட்டை அடைந்து; தனபதி என்னும் மன்னன் - தனபதி என்னும் அந்நாட்டு மன்னனும்; நல்வனப்புடைய தேவி திலோத்தமை - நல்லழகுடைய அவன் மனைவி திலோத்தமையும்; பெற்ற நம்பி செல்வன் உலோக பாலன் - பெற்ற நம்பியாகிய செல்வன் உலோக பாலன்; திருமகள் பதுமை என்பாள் - அவர்களுடைய திருமகள் பதுமை என்பவள்.

   (வி - ம்.) வெல்களிறு : வினைத்தொகை. மன்னனும் திலோத்தமையும் பெற்ற என்க. நம்பியாகிய செல்வன் என்க. திருமகள் என்றது முறைப் பெயர் அடையடுத்தவாறு.

( 198 )
1755 அரிகுரற் கோழி நாமத்
  தரவவட் கடித்த தாகத்
திருவிழை யவளைத் தீர்த்தேன்
  றீர்விலா நண்பு வேண்டிப்
பொருகளி யானை மன்னன்
  புனையிழை யவளைத் தந்தா
னிருமதி கழிந்த பின்றை
  யிடையிராப் பொழுதிற் போந்தேன்.

   (இ - ள்.) அரிகுரல் கோழி நாமத்து அரவு அவள் கடித்ததாக - சிலம்பின் குரலையுடைய கோழியின் பெயருடைய பாம்பு அவளைத் தீண்டியதாக; திருவிழை அவளைத் தீர்த்தேன் - திருமகளும் விரும்பும் அழகுடைய அவளுக்குற்ற நஞ்சினை நீக்கினேன்; பொருகளி யானை மன்னன் - போருக்குரிய மதகளிற்று வேந்தன்; தீர்வு இலா நண்பு வேண்டி - நீங்காத நட்பை விரும்பி; புனையிழை அவளைத் தந்தான் - ஒப்பனை செய்த அணிகளையுடைய அவளை எனக்குக் கொடுத்தான்; இருமதி கழிந்த பின்றை - இரண்டு திங்கள் அங்கே கழிந்த பிறகு; இடையிராப் பொழுதில் போந்தேன் - நள்ளிரவிலே வெளிப்பட்டு வந்தேன்.

   (வி - ம்.) களிற்றின் அச்சம் நீக்கியதனால் அவன் சுற்றமாகிய பதுமைக்கும் அச்சம் இன்றெனக் கருதினான்.

( 199 )