பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1001 

1756 வாவிப்புண் ணடையி னாளை
  வஞ்சித்துத் தக்க நாட்டை
மேவியான் காண லுற்றுச்
  சார்தலு மிப்ப ருள்ளான்
றூவிப்பொன் மாட மூதூர்ச்
  சுபத்திர னென்னைக் கண்டே
யாவிக்க ணறிவு போல
  வளவளா யன்பு பட்டான்.

   (இ - ள்.) வாவிப் புள் நடையினாளை வஞ்சித்து - அன்னப்பறவை அனைய நடையாளாகிய பதுமையை ஏமாற்றி; யான் தக்க நாட்டை மேவிக் காணல் உற்றுச் சார்தலும் - நான் தக்க நாட்டையடைந்து காணவிரும்பி அடைதலும்; தூவிப் பொன் மாடமூதூர் - கிளிச் சிறைப் பொன்னாலாகிய மாடங்களையுடைய அப் பழம்பதியிலே; இப்பர் உள்ளான் சுபத்திரன் என்னைக் கண்டு - இப்பர் என்னும் வணிகர் குடியிலுள்ளானாகிய சுபத்திரன் என்னைப் பார்த்து; ஆவிக்கண் அறிவுபோல அளவளாய் அன்பு பட்டான் - உயிரினிடம் அறிவைபோலப் பழகி அன்புற்றான்.

   (வி - ம்.) வணிகரில் இப்பர், கவிப்பர், பெருங்குடியர் என முப்பிரிவினர் உண்டு. 'தூவிப் பொன்' என்பதனைத் 'தூவி அனைய பொன்' என்றும் கொள்க. தூவி - பறவையின் மெல்லிய சிறகு.

( 200 )
1757 பண்ணமை தேரி னேறி
  யவனொடியா னிருந்து போகி
விண்ணுயர் செம்பொன் மாடத்
  திழிந்தவண் விளங்கப் புக்கேன்
வெண்ணிலா முத்தஞ் சூழ்ந்த
  வெம்முலைத் தடங்க ணாளை
மண்ணெலாஞ் செல்ல நின்ற
  மகிழ்ச்சியின் மகிழ்ந்து தந்தான்.

   (இ - ள்.) அவனொடு யான் பண் அமை தேரின் ஏறி இருந்து போகி - (பின்னர்) அவனோடு யானும் பண்ணுதல் அமைந்த தேரிலே ஏறி அமர்ந்து சென்று; விண் உயர் செம் பொன் மாடத்து இழிந்து - வானுயர்ந்த பொன் மாடத்தினருகே இறங்கி; அவண் விளங்கப் புக்கேன் - அம்மனை விளங்குமாறு புகுந்தேன்; வெண் நிலா முத்தம் சூழ்ந்த வெம்முலைத் தடங்கணாளை - வெள்ளிய நிலவைப்போல முத்துக்கள் சூழ்ந்த விருப்பூட்டும் முலையையும் பெரிய கண்களையும் உடைய கேமசரி