பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1002 

என்பாளை; மண் எலாம் செல்ல நின்ற மகிழ்ச்சியின் மகிழ்ந்து தந்தான் - உலகம் எல்லாம் தன்னிடத்திலே செல்ல நின்ற அரசுரிமையாகிய மகிழ்ச்சியைப் பெற்றவன்போல மகிழ்ந்து கொடுத்தான்.

   (வி - ம்.) அவண் விளங்க - கேமசரி நாணுதலின், அவள் மனை விளங்கியது. மகிழ்ச்சியின் : இன் : ஒப்பு.

( 201 )
1758 அவ்வழி யிரண்டு திங்கள்
  கழிந்தபி னவளி னீங்கி
யிவ்வழி நாடு காண்பான்
  வருதலு மிறைவன் கண்டே
செவ்வழி பாட ராகிச்
  சிலைத்தொழில் சிறுவர் கற்ப
மைவழி நெடுங்க ணாளைத்
  தந்தனன் மதலை யென்றான்.
 

   (இ - ள்.) மதலை - குழந்தாய்!; அவ்வழி இரண்டு திங்கள் கழித்தபின் - அங்கே இரண்டு திங்களைப் போக்கிய பிறகு; அவளின் நீக்கி - அவளிடத்தினின்றும் பிரிந்து; நாடு காண்பான் இவ்வழி வருதலும் - நாடுகளைப் பார்க்க இவ்வழியே வருதலும்; இறைவன் கண்டு - இந்நாட்டரசன் என் திறனைப்பார்த்து; சிறுவர் செவ்வழி பாடராகிச் சிலைத்தொழில் கற்ப -அரசன் மக்கள் நல்ல வழிபாடுடையராகி விற்றொழில் கற்ப; மை வழி நெடுங்கணாளைத் தந்தனன் என்றான் - மை வழியும் நீண்ட கண்ணாளாகிய கனகமாலையைக் கொடுத்தான் என்றான்.

   (வி - ம்.) ஏனைப் படைக்கலங்களின் தொழிலும், யானை முதலிய ஏற்றுத் தொழிலும் கற்றாரேனும் அவை கூறாது விற்றொழிலே கூறினார், அதன் சிறப்பு நோக்கி.

( 202 )
1759 தானுழந் துற்ற வெல்லாந்
  தம்பியை யுணரக் கூறித்
தேனுழந் தரற்றுந் தாரான்
  குரவரைச் சிந்தித் தாற்கு
வானிழிந் தாங்குக் கண்ணீல்
  மார்பக நனைப்பக் கையா
லூனுமிழ்ந் திலங்கும் வேலா
  னொற்றிமற் றிதனைச் சொன்னான்.
 

   (இ - ள்.) தேன் உழந்து அரற்று தாரான் - வண்டுகள் மலரைக் கிண்டி முரலும் மாலையானாகிய சீவகன்; தான் உழந்து