பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1006 

வேறு

1766 பைத்தர வத்திரை சிந்திய பல்கதிர்
மொய்த்தெரி நித்திலம் வைத்தன பல்லின
ளித்திரு வின்னுரு வந்தொழு தார்தம
தெத்துய ருங்கெடு மென்றின சொன்னார்.

   (இ - ள்.) அரவத் திரை பைத்துச் சிந்திய - ஒலியையுடைய கடல் பொங்கிச் சிதறிய; பல்கதிர் மொய்த்து எரி நித்திலம் வைத்த அன பல்லினள் - பல கதிர்கள் நெருங்கி விளங்கும் முத்துக்களை வைத்தாற் போன்ற முறுவலையுடையவளாகிய; இத்திருவின் உருவம் தொழுதார் தமது - இந்தத் திருமகளின் உருவத்தைத் தொழுதவருடைய; எத்துயரும் கெடும் என்று இனசொன்னார் - எல்லாத் துயரும் போம் என்று இவைபோன்ற புகழ் மொழிகளைப் புகன்றனர்.

   (வி - ம்.) அரவத்திரை பைத்துச் சிந்திய என மாறுக. அரவம் - ஒலி. திரை - அலை. பைத்து - பொங்கி. நித்திலம் - முத்து. இத்திரு என்றது - காந்தருவதத்தையை. இன - இன்ன.

( 210 )
1767 ஐயனை யாமவ ணெய்துவ மாயிழை
நொய்தினு ரைபொரு ளுண்டெனி னொய்தென
மையெழுத் தூசியின் மாண்டதொர் தோட்டிடைக்
கைவளர் கோதை கரந்தெழுத் திட்டாள்.

   (இ - ள்.) ஆயிழை - ஆயிழையே!; யாம் அவண் ஐயனை எய்துவம் - யான் அங்குச் சென்று எம் தலைவனை அடைவோம்; பொருள் உண்டு எனின் நொய்தின் உரை என - அவற்குக் கூறும் பொருள் உளதேல் விலைந்து கூறுக என; கைவளர் கோதை - கற்பாகிய ஒழுக்கம் வளர்கின்ற தத்தை, மை எழுத்து ஊசியின் - மையைத் தோய்த் தெழுதும் எழுத்தாணியாலே; மாண்டது ஓர் தோட்டிடை - சிறப்புடையதோர் ஏட்டிலே; நொய்து எனக் கரந்து எழுத்திட்டாள் - விரைவாக மறைந்த எழுத்தாலே எழுதினாள்.

   (வி - ம்.) 'மை-மஷி ' என்பர் நச்சினார்க்கினியர். அவ்வெழுத்தறிந்தாலும் பிறர் வாசியாதபடி எழுதினாள்.

( 211 )
1768 ஆங்குருக் காரரக் கிட்டதன் மீமிசைப்
பூங்குழை யாற்பொறி யொற்றுபு நீட்டத்
தேங்குழ லாடொழு தாடிசை செல்கெனப்
பாங்கரங் குப்படர் குற்றன ரன்றே.