| கனகமாலையார் இலம்பகம் | 
1008  | 
 | 
  | 
| 
 விலக்குவ கலிமா - தம்மேல் இருந்து எய்த அம்பைப் பின்னிட்டு விரைவனவாகிய குதிரைகள். 
 | 
| 
    (வி - ம்.) இதுமுதல் மூன்று பாட்டுகள் குதிரைப்படையின் இயல்பைத் தெரிவிப்பன. 
 | 
| 
    மதி - திங்கள். ஐப்பசி -அசுவதிமீன். நிலங்கொண்டென்றது - பிறந்து என்றவாறு. நல்லிலக்கணமாகிய புகரையும் சுழியையும் உடைய என்க. உலம்புதல் - முழங்குதல், விலங்கு - குறுக்கே. தம்மேலிருந்து விடுகணை என்க. 
 | 
( 214 ) | 
|   | 
| 
    (இ - ள்.) அள்ளல் சேறு அருமணல் புனல் அருவரைப் படினும் - அள்ளலாகிய சேற்றினும் அரிய மணலினும் புனலினும் அரிய மலையினும் செல்லவேண்டினும்; உள்ளம்போல் செல்வ - தம்மேல் ஏறிய வீரரின் மனம்போற் செல்லக் கூடியன; உரன் அசைவு இல்லன - வலிமை கெடாதன; அமருள் கொள்ளி மண்டலம்போல் கொடிபடத் திரிந்திடுவ - போர்க் களத்திலே கொள்ளி வட்டம்போல இடையறாமல் திரிந்திடுவன; வெள்ளி மால் வரைத் தாழ்வதில் மேம்படப் பிறந்த - பெரிய வெள்ளி மலையின் சரிவிலே உயர்வுறப் பிறந்தவை (அக்குதிரைகள்) 
 | 
| 
    (வி - ம்.) அள்ளற்சேறு : இருபெயரொட்டு. அருவரை - ஏறுதற் கரிய மலை. தம்மேலேறிய வீரர் உள்ளம்போல் என்க. உரன் - வலிமை. கொள்ளி மண்டிலம் - எரிகொள்ளியைச் சுற்றுங்காற் றோன்றும் ஒளி வட்டம். கொடி - வரிசை, வரைத்தாழ்வு - மலைச்சரிவு. 
 | 
( 215 ) | 
|  1772 | 
ஈரைஞ் ஞூற்றினை யிருபதின் முரணிய தொகைய |   |  
|   | 
வீர ரேறின விளங்கொளிப் பக்கரை யமைந்த |   |  
|   | 
தாரும் புட்டிலு மரற்றுவ சாமரை யணிந்த |   |  
|   | 
வோருங் கூடின மள்ளரு மொலித்தெழுந் தனரே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) ஈரைஞ் ஞூற்றினை இருபதின் முரணிய தொகைய - இருபதினாயிரம் என்னும் தொகையை உடையன; வீரர் ஏறின - வீரரால் ஏறப்பட்டவை; விளங்கு ஒளிப் பக்கரை அமைந்த - விளங்கும் ஒளியை உடைய கலணை அமைந்தவை; தாரும் புட்டிலும் அரற்றுவ - கிண்கிணி மாலையும் கெச்சை மணியும் ஒலிப்பன; சாமரை அணிந்த கூடின - சாமரை அணியப்பட்டனவாகக் கூடின (அக் குதிரைகள்); மள்ளரும் ஒலித்து எழுந்தனர் - வீரரும் ஆரவாரித்து எழுந்தனர். 
 |