| கனகமாலையார் இலம்பகம் |
1009 |
|
|
|
(வி - ம்.) ஈரைஞ்ஞூற்றினை : நகர ஞகரப்போலி. ஆயிரத்தை இருபதால் உறழ்ந்த (பெருக்கிய) தொகை; அஃதாவது இருபதினாயிரம். பக்கரை - கலணை என்னும் உறுப்பு. புட்டில் - கெச்சை. ஓரும் : அசை.
|
( 216 ) |
வேறு
|
| 1773 |
வடித்த போத்தொடு வன்செல லத்திரி | |
| |
கடுத்த வொட்டகங் காற்செல்வ யாவையு | |
| |
நொடிப்பின் மாத்திரை நூற்றுவில் லேகுவ | |
| |
வெடுத்த பண்ட மியைந்துட னென்பவே. | |
|
|
(இ - ள்.) நொடிப்பின் மாத்திரை நூற்று வில் ஏகுவ - நொடி அளவிலே நூறு விற்கிடை செல்வனாகிய; வடித்த போத்தொடு வன்செலல் அத்திரி கடுத்த ஒட்டகம் கால் செல்வ யாவையும் - பண்ணமைந்த எருதும் வலிய நடையையுடைய கோவேறு கழுதையும் கடிது செல்லும் ஒட்டகமும் மற்றுங்காலாற் செல்வன யாவும்; பண்டம் இயைந்து உடன் எடுத்த - பொருள்களை மனம் பொருந்திச் சேரச் சுமந்தன.
|
|
(வி - ம்.) நொடிப்பின் : இன் : அசை. என்ப, ஏ : அசைகள்.
|
|
வடித்த - பண்ணுறுத்திய. போத்து - எருது. அத்திரி - கோவேறு கழுதை. கால்செல்வ - காலாற் செல்வனவாகிய ஊர்திகள், வில் - ஓரளவு.
|
( 217 ) |
| 1774 |
ஞாலம் விற்பன பைங்கிளி நன்னிறத் | |
| |
தாலு மாபவ ளக்குளம் பார்ந்தன | |
| |
காலி னொய்யன கண்வெளவு காட்சிய | |
| |
நால்குப் பண்ணினர் நால்வரு மேறினார். | |
|
|
(இ - ள்.) ஞாலம் விற்பனை - உலகை விலைப்படுத்துவன; பவளக் குளம்பு ஆர்ந்தன - பவளமெனச் சிவந்த குளம்பு பொருந்தியன; காலின் நொய்யன - காற்றைப்போல விரைவன; கண் வெளவு காட்சிய - கண்ணைப் பறிக்குந் தோற்றத்தின; பைங்கிளி நன்னிறத்து ஆலும்மா நால்கு பண்ணினர் - பச்சைக் கிளிபோல நல் நிறமுடையனவாகிய அசையும் குதிரைகள் நான்கினைப் பணியாளர் பண்ணுறுத்தினர்; நால்வரும் ஏறினர் - அவற்றின்மேல் நால்வரும் ஏறினர்.
|
|
(வி - ம்.) நால்கு : பெயர்த்திரிசொல்; 'பால்புரை புரவி நால் குடன் பூட்டி' (பொருந. 165) என்றார் பிறரும்.
|
|
ஞாலம் - உலகம், விற்றல் - விலையாகக் கோடல், ஆலுமா - ஆடும் குதிரை,
|
( 218 ) |