பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1013 

 

   (இ - ள்.) அழகர் அவர் - அழகராய அந் நால்வரும்; ஆண்டு ஐயர் உறை பள்ளியிடம் காண - ஆங்கே முனிவர் வாழும் பள்ளியிடத்தைக் காண்டற்கு; செய்கழலர் தாரர் எங்கும் திரிகின்றார் - கழலுடனும் தாருடனும் எங்கும் உலாவுகின்றவர்; கொய்தகைய பூம்பொதும்பர்க் குளிரும் மரப்பலகை - பறிக்குந்தகவினை தாய் உள்ள மலர்ப் பொதும்பரில் இருக்கும் மரப்பலகையிலே; செய்யவளின் சிறிது மிகை சேயவளைக் கண்டார் - திருமகளினும் சிறிது மிகுதியாக உயர்ந்தவளைக் கண்டனர்.

   (வி - ம்.) விசையையைக் கண்டனர். குளிரும் : திசைச் சொல். 'மலர்ப்பலகை' என்றும் பாடம்.

( 226 )
1783 அந்நுண்டுகிற் கல்லரத்த மல்குலது வருத்தச்
  செந்நுண்டுகி லுத்தரியம் புதைந்துசுவல் வருத்த
மைந்நுண்குழற் சிறுவன்மனம் வருத்தவடி வேற்கண்
  கைந்நொண்டன கவர்ச்சிநனி வருத்தக்கலுழ்ந் தாற்றாள்.
ஐயருறை பள்ளியிட மாண்டழகர் காணச்
  செய்கழலர் தாரரவ ரெங்குந்திரி கின்றார்
கொய்தகைய பூம்பொதும்பர்க் குளிருமரப் பலகைச்
  செய்யவளிற் சிறிதுமிகை சேயவளைக் கண்டார்.

   (இ - ள்.) அம் நுண்துகில் அரத்தம்கல் அல்குலது வருத்த - அழகிய நுண்ணிய துகிலில் தோய்த்த அரத்தம் போலச் சிவந்த கல் அல்குலாகிய அதனை வருத்துதலானும்; செம்நுண் துகில் உத்தரியம் புதைந்து சுவல் வருத்த - சிவந்த நுண்ணிய துகிலாகிய மேலாடை அழுந்தித் தோளை வருத்துதலானும்; மைநுண் குழல் சிறுவன் மனம் வருத்த - கரிய நுண்ணிய குழலையுடைய சீவகன் மனத்தை வருத்துதலானும்; வடிவேல் கண் கை நொண்டன கவற்சி - கூரிய வேலனைய கண்கள் (அரசனை யிழக்கும்படி நிகழ்த்தின) ஒழுக்கத்தாலே முகந்து கொண்டனவாகிய கவலை; நனி வருத்த - மிகவும் வருத்தலானும்; கலுழ்ந்து ஆற்றாள் - அழுதழுது ஆற்றாதவள்.

   (வி - ம்.) அரத்தம் போலும் நிறமுடைய கல் அல்குலது என்புழி அது பகுதிப் பொருளது எனினுமாம். உத்தரியம் - மேலாடை. சுவல் - தோள். மை - கருமை. சிறுவன் : சீவகன். கை - ஒழுக்கம். கவற்சி - கவலை, கலுழ்ந்து - அழுது.

( 227 )
1784 மாசொடுமி டைந்துமணி நூற்றனைய வைம்பால்
பூசுதலு மின்றிப்பிணி கொண்டுபுறந் தாழ
வாசமலர் மறைந்தவழி வாமனடிக் கேற்றித்
தோசமறத் துதிகண்மனத் தோதித்தொழு திருந்தாள்.