பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1015 

இருப்பவள்; விரை உடுத்தபோது உறையும் வேல் நெடுங்கணாள் கொல்? - மணங்கொண்ட மலரில் வாழும் திருமகளோ?; உரை உடுத்த நாஉறையும் ஒள் நுதல் கொல்? - சொல்லுடுத்த நாவிலே வாழும் ஒள்ளிய நுதலாளாகிய நாமகளோ?; அன்றித் திரை உடுத்த தேன் மொழிகொல்? - அல்லது கடலை ஆடையாகக் கொண்ட மண்மகளோ?; என்று தெரிகல்லார் - என்று விசையையை உணராதவராயினார்.

   (வி - ம்.) உடுத்த - சூழ்ந்த. இடம் - உறையுமிடம். மேயோள் - இருப்பவள், விரை - மணம், போதுறையும் நெடுங்கணாள் : திருமகள். நாவுறையும் ஒண்ணுதல் : கலைமகள். திரையுடுத்த தேமொழி - நிலமகள்.

( 230 )
1787 மங்கலம டிந்ததிரு மாமகளை யொப்பீ
ரிங்குவர வென்னைகுலம் யாதடிகட் கென்ன
வெங்குலமு மெம்வரவும் வேண்டிலெளி தன்றே
நுங்குலமு நும்வரவும் நீருரைமி னென்றாள்.

   (இ - ள்.) மங்கலம் மடிந்த திருமாமகளை ஒப்பீர் - மங்கலத்தை இழந்த திருமகளைப் போல்வீர்; அடிகட்கு இங்கு வரவு என்னை? - அடிகள் இங்குவர வேண்டியதன் காரணம் என்ன?; குலம் யாது? - குலம் என்ன?; என்ன - என்று வினவ; எம் குலமும் எம் வரவும் வேண்டில் எளிது அன்று - எம் குலமும் வருகையும் அறிய விரும்பின் இவ் வேடத்தாற் கூறுதல் எளிதாகாது; நும் குலமும் நும் வரவும் நீர் உரைமின் என்றாள் - நும்முடைய குலத்தையும் வருகையையும் நீர் கூறுமின் என்று விசயை வினவினாள்.

   (வி - ம்.) 'அடிகள்' என்னுஞ் சொல் பெண்பால் முன்னிலையாயும் வருதற்கு இந் நூலிலேயே 1792, 1884, 1909 ஆம் செய்யுட்களிலும், 'ஏதம் உண்டோ அடிகள் ஈங்கு என்றலும்' (சிலப். 14 : 24) என்று வருதல் காண்க.

   மங்கலமடிதலாவது - மங்கலநாண் இல்லையாதல். இஃது அவள் கைம்மைக்கோலத்தினை உணர்த்தி நின்றது.

( 231 )
1788 மோட்டுமுது நீர்மலங்கு மொய்த்தவிள வாளை
பூட்டுசிலை யிறவினொடு பொருதுதுயின் மடியு
மீட்டமுடை யவர்களுறை யிராசபுர மென்னு
நாட்டமுடை நகரமெம தாகுமுறை பதியே

   (இ - ள்.) மோட்டு முதுநீர் - பெருமையுடைய பழைய நீரில்; மலங்கு மொய்த்த இளவாளை பூட்டு சிலை இறவினொடு பொருது துயில் மடியும் - மலங்கும் மொய்த்த வாளையும் நாண்