பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1016 

பூட்டிய வில்போன்ற இறவுடன் பொருது உறங்குகின்ற; ஈட்டம் உடையவர்கள் உறை இராசபுரம் என்னும் - பொருள் திரளுடையோர் வாழும் இராசமாபுரம் என்கிற; நாட்டமுடை நகரம் எமது உறைபதி ஆகும் - அழகுடைய நகரம் யாம் வாழும் இடமாகும்.

   (வி - ம்.) பொருது துயிலும் இராசமாபுரம், உடையவர்கள் இராசமாபுரம் எனக் கூட்டுக.

   மோடு - பெருமை, மலங்கு - ஒருவகை மீன். இறவு - இறாமீன், இதற்கு நாண் பூட்டப்பட்ட வில் உவமை. துயின்மடியும் : ஒருசொல். இராசமாபுரம் - இராசபுரம் என நின்றது. நாட்டம் - அழகு.

( 232 )
1789 பொன்னுடைய மார்பிற்புகழ் மந்திரிபொ லந்தார்த்
தன்னுடைய நுண்ணுணர்விற் சாகரற்குத் தக்காள்
கொன்னெடிய வாட்கட்குரு தத்தைசீ தத்தன்
மன்னடுங்க வீங்குதிர டோண்மடங்க லன்னான்.

   (இ - ள்.) மன் நடுங்க வீங்குதிரள் தோள் மடங்கல் அன்னான் - அந்த நகரத்தரசன் நடுங்குமாறு பருத்துத் திரண்ட தோள்களையுடைய சிங்கம் போன்ற இவன்; பொன் உடைய மார்பின் - திருமகள் தங்கும் மார்பினையுடைய; புகழ் மந்திரி - புகழ்பெற்ற அமைச்சனாகிய; பொலம்தார் - பொன்மாலை அணிந்த; தன்னுடைய நுண் உணர்வின் சாகரற்கு - தன் மந்திர நூலிற் கூறிய நுண்ணிய அறிவினையுடைய சாகரன் என்பானுக்கு; தக்காள் - தக்க மனையாள்; கொன் நெடியவாள் கண் குருதத்தை - அச்சமூட்டும் நீண்ட வாளனைய கண்களையுடைய குருதத்தை பெற்ற மகன்; சீதத்தன் - சீதத்தன் என்பான்.

   (வி - ம்.) பொன் : திருமகள். மந்திரியாகிய சாகரற்கு. கொன் - அச்சம், மடங்கல் - அரிமா.

( 233 )
1790 அளப்பரிய நான்மறையி னானசல னென்பான்
றிளைக்குந்திரு வொப்புடைய திலோத்தமைதன் சிறுவன்
விளைத்திரும்பு மேய்ந்தொழிந்த மிச்சில்வரை மார்ப
னிளைப்பலிவன் றேசுரைப்பிற் புத்திசே னிவ்விருந்தான்.

   (இ - ள்.) இவ் இருந்தான் - இங்கிருந்தவன்; அளப்ப அரிய நான்மறையினான் அசலன் என்பான் - அளத்தற்கரிய நான்கு மறைகளையும் ஓதிய அசலன் என்பான்; திளைக்கும் திரு ஒப்புடைய திலோத்தமைதன் சிறுவன் - நுகரும், திருமகளனைய திலோத்தமையின் மகன்; விளைத்து இரும்பு மேய்ந்து ஒழிந்த மிச்சில் வரை மார்பன் புத்திசேன் - தனக்கு ஒரு போரை