| கனகமாலையார் இலம்பகம் |
1018 |
|
|
|
(வி - ம்.) நால்வர்க்குத் தாயரைக் கூறி அவர் புதல்வரென்றது, மகடூஉவாற் குலந்தூய்மை பெறுதலானும், மகடூஉவிற்குக் கூறுதலானும் என்றுணர்க. ஒரு பெயரை எழுதலிற் பொறியென்று பட்டத்திற்குப் பெயர் கூறினார். பொறி : ஆகுபெயர்.
|
( 236 ) |
| 1793 |
எங்கள்வினை யாலிறைவன் வீடியவஞ் ஞான்றே | |
| |
யெங்களுயிர் நம்பியொடு யாங்கள்பிறந் தேமா | |
| |
வெங்கடமர் நம்பிக்கிவர் தோழரென வீந்தா | |
| |
ரெங்கெழிலென் ஞாயிறென வின்னணம்வ ளர்ந்தேம். | |
|
|
(இ - ள்.) எங்கள் வினையால் இறைவன் வீடிய அஞ்ஞான்றே - எங்கள் தீவினையால் அரசன் இறந்த அற்றை நாளிலே; எங்கள் உயிர் நம்பியொடும் யாங்கள் பிறந்தேம் ஆ - எங்கள் உயிர்போலும் நம்பியுடன், யாங்கள் வந்து பிறந்தேமாக; எங்கள் தமர் இவர் நம்பிக்குத் தோழர் என ஈந்தார் - எங்கள் உறவினர் எம்மை இவர்கள் நம்பிக்குத் தோழர் என்று கொடுத்தார்; எங்கெழில் என் ஞாயிறு என இன்னணம் வளர்ந்தேம் - 'எங்கெழில் என் ஞாயிறு' என இவ்வாறு வளர்ந்தோம்.
|
|
(வி - ம்.) அரசன் சுற்றத்தை யெல்லாம் கட்டியங்காரன் அழிக்கின்றமை நோக்கியும் கந்துக்கடன் தமக்கு இன்றியமையாமை நோக்கியும் இவர்கள் தமர் தோழரென ஈந்தார் : இங்ஙனம் செய்வித்தது தோழர் நல்வினை யென்று உணர்க. இனி 'அழுகுரல்' (சீவக. 330) என்னுஞ் செய்யுளில் 'உழிதரு பெருநிதி' என்றதனைத் தோழராக்கி, இவரைக் கட்டியங்காரன் தன் கந்துக்கடற்குக் கொடுத்தான் என்பார்க்கு, இச் செய்யுளில், 'எங்கள் தமர் தோழரென ஈந்தார்' என்றல் பொருந்தாமை உணர்க.
|
( 237 ) |
| 1794 |
யாண்டுநிறைந் தேகியபி னந்தனவற் கிளையார் | |
| |
மாண்டகுணத் தார்நபுல விபுலரொடு மன்னு | |
| |
மீண்டவளர்ந் தேந்தவிசி னுச்சிமிசை யெய்தித் | |
| |
தீண்டரிய வெம்மையொடு திக்கயங்க ளெனவே. | |
| |
வெஞ்சிலையின் வேடர்தொறு மீட்டுவிசும் பேகும் | |
| |
விஞ்சையரை யன்மகளை வீணைபொரு தெய்திக் | |
| |
குஞ்சரமும் வென்றுகுண மாலைநல னுண்ட | |
| |
நம்பியவ னாமமெவ னென்னினிது வாமே. | |
|
|
(இ - ள்.) யாண்டு நிறைந்து ஏகியபின் - யாம் பிறந்து ஓராண்டு கழிந்தபின் பிறந்த; அவற்கு இளையார் - எம் நம்பிக்கு இளையராகிய; மாண்ட குணத்தார் நந்தன் நபுல விபுலரொடு - சிறந்த பண்புடையராகிய நந்தன் நபுலவிபுலர் என்பாருடனே; தவிசின் உச்சிமிசை எய்தி - தவிசின்மேல் அமர்ந்து; தீண்ட அரிய வெம்மையொடு - பகைவர் தீண்டுதற்கரிய வெம்மையுடன்; திக்கயங்கள் என - திசையானைகள் என்னும்படி எண்மராய்; மன்னும் ஈண்ட வளர்ந்தேம் - மிகவும் கடுக வளர்ந்தோம்.
|
|
(வி - ம்.) 'இளையான்' என்பது பாடமாயின், அவனுக்கிளையான் நந்தன்; அங்ஙனம் மாண்ட குணத்தார் நபுலவிபுலரென்க. நந்தன் -
|