| கனகமாலையார் இலம்பகம் |
1019 |
|
|
|
நந்தட்டன். அங்ஙனம் மாண்ட குணத்தார் எனவே தம்பிய ரென்னும் பொருள் தோன்றிற்று.
|
( 238 ) |
| 1795 |
விற்றொழிலும் வாட்டொழிலும் வீணைபொரு தொழிலு | |
| |
மற்றொழிலுந் தோ்த்தொழிலும் வாரணத்தின் றொழிலு | |
| |
நற்றொழில வாசியொடு நன்கலைக ணீந்திக் | |
| |
கற்றனங்கள் யாமுமுடன் கற்பனக ளெல்லாம். | |
|
|
(இ - ள்.) வில் தொழிலும் வாள் தொழிலும் மல் தொழிலும் தேர்த்தொழிலும் வாரணத்தின் தொழிலும் நல்லதொழில் வாசியொடு - வில்தொழில் முதலியவற்றை நல்லதொழிலாகிய குதிரையேறுந் தொழிலுடன்; வீணைபொரு தொழிலும் - யாழிசைக்குங் கலையும்; யாமும் உடன் - யாமும் அவருடனே கூட; கற்பனகள் எல்லாம் - கற்கப்படும் விச்சைகளை யெல்லாம்; நன்கலைகள் நீந்தி - நல்ல நூல்களாகிய கலைகளை நீந்திய பின்; கற்றனம் - கற்றுக்கொண்டோம்.
|
|
(வி - ம்.) பொருதல் - தடவுதல், நன்கலைகள் - நூல்கள். வீணை பொரு தொழில் போர்த்தொழிலுடன் சேர்க்காமல் தனியே கூறுக. நல்தொழில் : அ : அசை.
|
( 239 ) |
| |
|
(இ - ள்.) வெஞ்சிலையின் வேடர்தொறு மீட்டு - கொடிய சிலை வேடர் கொண்ட ஆனிரையை மீட்டு; விசும்பு ஏகும் விஞ்சை அரையன் மகளை வீணை பொருது எய்தி - வானிற் செல்லும் விஞ்சையரிறைவன் மகளை யாழ் வென்றியால் அடைந்து; குஞ்சரமும் வென்று குணமாலை நலன் உண்ட - அசனிவேகம் என்னும் யானையையும் வென்று குணமாலையின் அழகைப் பருகிய; நம்பி அவன் நாமம் எவன் என்னின் இது ஆம் - நம்பியாகிய அவனுடைய பெயர் யாதெனின் இதுவாகும்.
|
|
(வி - ம்.) அப் பெயர்மேற் கூறுகின்றான்.
|
|
சிலையின் - வில்லினால். வேடர் கவர்ந்துகொண்ட தொறு வென்க. தொறு - ஆனிரை. விஞ்சையரையன் மகளை - கலுழவேகன் மகளாகிய காந்தருவதத்தையை. குஞ்சரம் - யானை; அசனிவேகம். எவன் - யாது.
|
( 240 ) |
| 1797 |
கந்துக்கட னென்றநகர்க் காதிமுது நாய்கன் | |
| |
முந்திப்பெறப் பட்டமகன் மூரிச்சிலைத் தடக்கைச் | |
| |
சிந்திப்பவ ரவலமறு சீவகனென் றோழ | |
| |
னந்திலொரு நாளவனை யரசனொரு தவற்றால் | |
|