| கனகமாலையார் இலம்பகம் |
1032 |
|
|
| |
|
(இ - ள்.) சாந்தின்மேல் தொடுத்த தீந்தேன்- சந்தன மரங்களின் மேலே தொடுக்கப்பட்ட இனிய தேனிறால்; தண் மதிக்கோடு போழ - குளிர்ந்த பிறைத் திங்களின் கோடு பிளந்ததனால்; மட்டுப் போந்து அருவி வீழும் பொன் நெடுங் குன்றும் - தேன் வடிந்து அருவியைப்போல வீழ்கின்ற பொன் மயமான நீண்ட மலைகளையும்; அம் தண் ஏந்து பூங்காவு சூழ்ந்த இரும்புனல் யாறும் - அழகும் தண்மையுந் தாங்கிய மலர்ப் பொழில்கள் சூழ்ந்த புனல் நிறைந்த பெரிய யாறுகளையும்; நீந்தி - கடந்து; மாந்தரே மலிந்த நாடு மடுத்து உடன் சென்றது - மக்களே நிறைந்த நாட்டிலே நெருங்கி ஒருசேரச் சென்றது.
|
|
(வி - ம்.) சாந்து - சந்தனமரம். தேன் - தேன் அடை; ஆகுபெயர். மதி - ஈண்டுப் பிறைத்திங்கள். மட்டு - தேன், அந்தண்ஏந்து - அழகையும் குளிர்ச்சியையும் தாங்கிய என்க. இரும்யாறு, புனல்யாறு என ஒட்டுக.
|
( 264 ) |
| 1821 |
மதுக்குலா மலங்கன் மாலை | |
| |
மங்கையர் வளர்த்த செந்தீப் | |
| |
புதுக்கலத் தெழுந்த தீம்பாற் | |
| |
பொங்கலி னுரையிற் பொங்கிக் | |
| |
கதிர்த்துவெண் மாடந் தோன்றுஞ் | |
| |
செவ்வெயிற் காத நான்கி | |
| |
னதிக்கரை வந்து விட்டார் | |
| |
நச்செயிற் றரவோ டொப்பார். | |
|
|
(இ - ள்.) மதுக் குலாம் அலங்கல் மாலை மங்கையர் வளர்த்த செந்தீப் பொங்கி - தேன் நீங்காத அசையும் மாலையை உடைய பெண்கள் வளர்த்த செந்தீயாலே பொங்கி; புதுக்கலத்து எழுந்த தீ பாற் பொங்கலின் நுரையின் - புதிய கலத்தினின்றும் எழுந்த இனிய பாற் பொங்கலின் நுரைபோல; செவ்எயில் வெண் மாடம் கதிர்த்துத் தோன்றும் - செங்கல்லாற் செய்த சிவந்த மதிலைக் கடந்து வெண்ணிற மாடங்கள் விளங்கித் தோன்றுகிற; காதம் நான்கில் - (ஏமமாபுரத்திற்கு) நாற்காத அளவிலே; நதிக்கரை - நதிக்கரையிலே; நச்சு எயிற்று அரவோடு ஒப்பார் - நஞ்சினையுடைய பற்களையுடைய பாம்பு போன்றவர்கள்; வந்து விட்டார் - சென்று தங்கினார்.
|