பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1038 

உமிழ் வண்டு உலாய்ப் பரத்தராநின்ற - இசையை உமிழும் வண்டுகள் பரத்தலைத் தராநின்ற; சீர் அண்ணல் அம் களிற்றினைச் சீவகன் அடக்கினான்- சீரையுடைய பெரிய அழகிய அக் களிற்றைச் சீவகன் அடக்கினான்; வண்ண மேகலையினார் மனம் எனப் படிந்தது - (அப்போது) அக் களிறு, அழகிய மேகலையுடைய மகளிர் மனம் அவனிடம் தாழ்வதுபோல வந்து தாழ்ந்தது.

   (வி - ம்.) 'வண்டுலாம் பார்த்தர' என்ற பாடத்திற்கு, 'வண்டுலாங் களிற்றைப் பார்க்கின்ற சீரை நமக்குத் தருதற்கு அடங்கினான்' என்க.

( 276 )
1833 இறுவரை யிவர்வதோ ரிலங்கெயிற் றரியென
வுறுவரை மார்பினான் றூசங்கொண் டொய்யெனப்
பெறலருங் குஞ்சர மேறலிற் பெருஞ்சன
மறைகடற் றிரையொலித் தாங்கென வார்த்ததே.

   (இ - ள்.) உறுவரை மார்பினான் - பெரிய மலைபோலும் மார்பினான் ஆகிய சீவகன்; இறுவரை இவர்வதோர் இலங்கு எயிற்று அரியென - பெரிய மலையிற் பாய்வதொரு சிங்கம்போல; பெறல் அருங் குஞ்சரம் தூசம் கொண்டு ஒய்யென ஏறலின் - அடக்குதற்கரிய அக்களிற்றைப் புரோசைக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு விரைய ஏறுதலாலே; அறைகடல் திரை ஒலித்து என ஆங்குப் பெருஞ்சனம் ஆர்த்தது - கரையுடன் மோதுங் கடலின் அலை ஒலித்தாற்போல ஆங்கு மிகுதியான மக்கள் திரள் ஒலித்தது.

   (வி - ம்.) இறுவரை - பெரிய மலை. அரி - சிங்கம். உறுவரை - பெரிய மலை. மார்பினான் : சீவகன். தூசம் - புரோசைக்கயிறு. பெருஞ்சனம் - மக்கட் கூட்டம்.

( 277 )
1834 அங்கையந் தலத்தினா லப்புதா தையெனக்
கொங்கலர் கண்ணியான் கொம்மைதான் கொட்டலும்
பொங்கிய வுவகையிற் பொலிந்துமாக் களிறவன்
றங்கிய பயிர்த்தொழி றடக்கையாற் செய்ததே.

   (இ - ள்.) கொங்கு அலர் கண்ணியான் - மணம் விரியும் மலர்க் கண்ணியான்; அப்புது ஆது ஐ என - அப்புது அப்புது, ஆது ஆது, ஐ ஐ என்று கூறி; அங்கை அம் தலத்தினால் கொம்மைதான் கொட்டலின் - அங்கையாகிய அழகிய தலத்தினாற் பொய்க்கத் தட்டின அளவிலே; மாக்களிறு பொங்கிய உவகையின் பொலிந்து - அப் பெரிய களிறு பொங்கும் மகிழ்ச்சியினாலே பொலிவுற்று; அவன் தங்கிய பயிர்த்தொழில் தடக்