பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1041 

   (இ - ள்.) வனை கலத் திகிரியும் - மண் கலன்களை வரையும் திகிரியும்; வாழ் உயிர்மேல் செலும் கனைகடுங் கதழ் பரிக் கால சக்கரமும்போல - வாழும் உயிரை வவ்வச் செல்லும் மிகவுங் கடிதாகிய மிக்க செலவினையுடைய கூற்றுவன் ஆழியும் போல; வினை தகு வட்டமும் வீதியும் பத்தியும் இனையவை - தொழிற்குத் தக்க வட்டமும் வீதியும் பத்தியுமாகிய இத் தன்மையவற்றை; ஏம் உற இமைப்பினின் இயற்றினான் - தப்பாதபடியே ஒரு நொடியிலே நடத்தினான்.

   (வி - ம்.) கலம் வனைதிகிரி என்க. வாழுயிர் : வினைத்தொகை. கதழ்பரி - விரைந்த செலவினையுடைய. வட்டம், வீதி, பத்தி என்பன யானையின் செலவு வகை.

( 283 )
1840 ஒருவனே களிறுமொன் றோருநூ றாயிரந்
திரிவவே போன்றன திசையெலாங் குஞ்சரக்
குரியவன் னிவனலா லுலகினில் லிலனென
வரிதுணர் வேத்தவை யமைகமற் றென்றதெ.
விடுபொறி யரவென விளங்கு வெஞ்சிலை
யடுகணை சிதறினா ரார்த்த வால்வளை
கடுகின காலிய லிவுளி காண்டலு
முடுகுபு கோவலர் முந்து காற்பெய்தார்.

   (இ - ள்.) ஒருவனே களிறும் ஒன்று - நடத்துவோனும் ஒருவனே, களிறும் ஒன்றேயாக இருக்கவும்; திசையெலாம் நூறாயிரம் திரிவவே போன்றன - ஏறினபடி திசையெல்லாம் எண் இறந்த யானை திரிவனபோலே இருந்தன; -குஞ்சரக்கு உரியவன் உலகினில் இவன் அலால் இலன் என - (ஆதலால்) யானையேற்றத்திற்குரியவன் உலகிலே இவன் அல்லது மற்றொருவன் இலன் என்று கூறி; அரிது உணர் வேத்தவை அமைக என்றது - அரிதென்று உணர்ந்த அரசவை அமைக என விலக்கியது.

   (வி - ம்.) ஓரும், மற்று : அசைகள்.

   களிறும் ஒன்று அதனை ஊருவோனும் ஒருவனே என்க. நூறாயிரம் என்றது மிகுதிக்கோர் எண் கூறியவாறு. குஞ்சரக்கு - குஞ்சரத்திற்கு. சாரியையின்றி உருபு புணர்ந்தது.

( 284 )
1841 வள்ளுகிர் நுதியினால் வரிநுத லுறுத்தலு
முள்ளுணர் குஞ்சரம் ஓய்யென நிற்றலு
மௌ்ளரும் மிருமணி கிணினென விசைத்தன
வெள்ளநீர்ப் பெருஞ்சனம் வியந்துகை விதிர்த்ததே.
அளைச்செறி யிரும்புலி யனைய வாடவர்
வளைத்தனர் மணிநிரை வன்க ணாயரும்
விளைத்தனர் வெருவரத் தக்க வெஞ்சொலா
லுளைத்தனர் பூசல்விட் டுணர்த்த வோடினார்.

   (இ - ள்.) வள் உகிர் நுதியினால் - தோட்டி நுனியென்னும் உகிர் நுனியினால்; வரி நுதல் ஊறுத்தலும் - வரியையுடைய நெற்றியிலே அழுத்தின அளவில்; உள் உணர் குஞ்சரம் - இவன் மனம் உணர்ந்த யானை; ஒய்யென நிற்றலும் - கடுக நின்ற அளவிலே; எள் அரும் இரு மணி கிணின் என இசைத்தன - குற்றமற்ற இரண்டு மணிகளும் கிணின் என்று ஒலித்தன;