| கனகமாலையார் இலம்பகம் | 
1061  | 
 | 
  | 
| 
 கோதையவர்களை மணஞ் செய்கின்ற அதனால் விளைவதொரு புகழில்லை. 
 | 
| 
    (வி - ம்.) 'பழி வெள்ளிமலை மேற் பரத்தல் அஞ்சி' எனவே இவன் சிறைப்பட்டமை கலுழ வேகனும் அறிந்திலன் என்பது பெற்றாம். எனவே, 'பொன்னணி' (சீவக. 1147) என்னும் செய்யுளில், 'தெய்வ மாதரைச் சூழ்ந்த' என்றும், 'சந்தமாலை' [மேற்படி. 1160] என்னுஞ் செய்யுளில், 'வந்த விண்ணோர்களை' என்றும், அவள் வழிபட்ட தெய்வங்கள் வந்து நினைத்தவை முடித்துக்கொடுக்கும் என்ற தன்றித் தன் படையாகிய விஞ்சையர் ஈண்டு வந்தார் என்னாமை உணர்க. அவ் விஞ்சையரை அழைக்குங்கால், 'தன்னுடை விஞ்சை எல்லாம் தளிரியல் ஓதலோடும்' (மேற்படி1147) என்ன வேண்டாவாகலின். 
 | 
( 320 ) | 
|  1877 | 
அல்லதுவு மெங்கைகுண மாலையவ ளாற்றாள் |   |  
|   | 
செல்லுமதி நோக்கிப்பக லேசிறியை யென்னும் |   |  
|   | 
பல்கதிரை நோக்கிமதி யேபெரியை யென்னு |   |  
|   | 
மெல்லியிது காலையிது வென்பதறி கல்லாள். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) அல்லதுவும் - அதுவன்றி; எங்கை குணமாலையவள் ஆற்றாள் - எங்கையாகிய குணமாலையானவள் அமைதியில்லாமல்; எல்லியிது காலையிது என்பது அறிகல்லாள் - இரவிது பகலிது என்பதை அறியாளாய்; செல்லும் மதி நோக்கிப் பகலே சிறியை என்னும் - செல்கின்ற திங்களைப் பார்த்து, வெம்மையினாற், 'பகலே! சிறியை' என்பாள்; பல்கதிரை நோக்கி மதியே பெரியை என்னும் - ஞாயிற்றை நோக்கித் தண்மையான், திங்களே! பெரியை' என்பாள். 
 | 
| 
    (வி - ம்.) அல்லதுவும் - அப்பழியன்றியும், எங்கை - என் தங்கை. குணமாலை யவன் என்புழி அவள் பகுதிப்பொருளது. செல்லுமதி - ஊர்கின்ற திங்கள். பல்கதிர் - ஞாயிறு. திங்களை ஞாயிறென்பள் ஞாயிற்றைத் திங்கள் என்பள் என்க. 
 | 
( 321 ) | 
|  1878 | 
அரவுவெகுண் டன்னவக லல்குனிலம் புல்லித் |   |  
|   | 
திருவில்வளைந் தனையதிரு மேகலையி னீங்கிப் |   |  
|   | 
புருவமதி முகமும்புகழ் தோளும்புணர் முலையு |   |  
|   | 
முருவமழிந் தடிச்சியுள் ளாங்கொலுணர் கலனே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) அரவு வெகுண்டன்ன அகல் அல்குல் நிலம் புல்லி - பாம்பு சீறிப் படம் விரித்தாற்போன்ற அல்குலையுடையாள் நிலத்தே வீழ்ந்து; திருவில் வளைந்தனைய திருமேகலையில் நீங்கி - வானவில் வளைந்தாற்போலும் திருவாகிய மேகலையினின்றும் நீங்கி; புருவ மதி முகமும் புகழ் தோளும் புணர்முலையும் உருவம் அழிந்து - புருவத்தையுடைய திங்களனைய முகமும் தோளும் முலைகளும் வடிவழிதலாலே; அடிச்சி உள் ஆம்கொல் உணர்கலனே - அவள் பிழைப்பாளோ, இறப்பாளோ? அறியேன். 
 |