| கனகமாலையார் இலம்பகம் |
1062 |
|
|
|
(வி - ம்.) அல்குல்; குணமாலை. திருவில் - வானவில். புருவத்தையுடைய மதிபோலும் முகம் என்க. புணர் முலை : வினைத்தொகை உருவம் - அழகு, அடிச்சி என்றது குணமாலையை; நும் மடிச்சி என்ற வாறு. கொல்; ஐயப் பொருட்டு.
|
( 322 ) |
| 1879 |
நாளைவரு நையலென நன்றெனவி ரும்பி | |
| |
நாளையெனு நாளணிமைத் தோபெரிதுஞ் சேய்த்தோ | |
| |
நாளையுரை யென்றுகிளி யோடுநகச் சொல்லு | |
| |
நாளினுமிந் நங்கைதுயர் நாளினுமற் றிதுவே. | |
|
|
(இ - ள்.) நாளை வரும் நையல்என - சீவகன் நாளை வருவான், நீ வருந்தாதே என்று கிளிகூற ; நன்று என விரும்பி - அது நன்று என்று விரும்பி; நாளை யெனும் நாள் - நீ கூறிய நாளையென்னும் நாள்; அணிமைத்தோ? பெரிதும் சேய்த்தோ? - நெருங்கியுளதோ? மிகவும் தொலைவில் உள்ளதோ?; நாளை உரை என்று - அந் நாளைக் கூறு என்று ; கிளியோடு நகச் சொல்லும் - கிளியோடு அது நகுமாறு கூறுவாள்; இந் நங்கை துயர் நாளினும் நாளினும் இதுவே - இக் குணமாலையின் துயர் நாளினும் நாளினும் இத் தன்மைத்து
|
|
(வி - ம்.) மற்று : அசை.
|
|
கிளி நாளைச் சீவகன் வரும் நையல் என்று கூற என்க. நையல்; முன்னிலை ஒருமை வினைமுற்று. அணிமைத்து - அண்மையில் உள்ளது. சேய்த்து - தொலைவிலுள்ளது. ஓகாரமிரண்டும் வினா அந்நாளை யுரை எனச் சுட்டு வருவிக்க. இந்நங்கை என்றது குணமாலையை
|
( 323 ) |
வேறு
|
| 1880 |
நோக்கவே தளிர்த்து நோக்கா | |
| |
திமைப்பினு நுணுகு நல்லார் | |
| |
பூக்கம ழமளிச் சேக்கும் | |
| |
புதுமண வாள னார்தா | |
| |
நீப்பிலார் நெஞ்சி னுள்ளா | |
| |
ராதலா னினைத்தல் செய்யேன் | |
| |
போக்குவல் பொழுதுந் தாந்தம் | |
| |
பொன்னடி போற்றி யென்றாள். | |
|
|
(இ - ள்.) நோக்கவே தளிர்த்து நோக்காது இமைப்பினும் நுணுகும் நல்லார் - பார்க்கவே தளிர்த்துப் பாராமல் இமைத்தாலும் மெலியும் பெண்களின்; பூக் கமழ் அமளிச் சேக்கும் புது மணவாளனார் தாம் - மலர் மணங் கமழும் படுக்கையிலே தங்கும் புது மணவாளப் பிள்ளையார் தாம்; நீப்பிலார் நெஞ்சி
|