| கனகமாலையார் இலம்பகம் | 
1065  | 
 | 
  | 
| 
 என்னே! என்னே! என்று வினவ; முன்னே மொழிந்தாற் போல் முறைநின்று எல்லாம் உடன் மொழிய - விசயை இவனுக்குமுன்னே நின்று கூறினாற்போலச் செய்தி யெல்லாம் அடைவே சேரச் சொல்ல; மன் ஆரம் சிந்துவ போல் - நிலையாக முத்துக்களைச் சிந்துவது போல; மலர்ந்த செந்தாமரைக் கண்ணீர் - மலர்ந்த செந்தாமரை மலரனைய கண்களிலிருந்து நீர்; பொன் ஆரம் மார்பின் மேல் பொழியப் புன்கண் உற்றான் - பொன்னும் ஆரமும் உடைய மார்பிலே சொரியத் துன்பம் அடைந்தான். 
 | 
| 
    (வி - ம்.) விரைவாதலின் மூன்றடுக்கினார். விசயை யிருப்பதை ஆசிரியன் வாயிலாக விளங்கக் கேளாமையின், இங்ஙனம் ஈண்டு வினவினான். 
 | 
( 327 ) | 
|  1884 | 
அஃதே யடிகளும் முளரோ |   |  
|   | 
  வென்றாற் கருளுமா |   |  
|   | 
றிஃதா விருந்தவா றென்றார்க் |   |  
|   | 
  கென்னைப் பெறவல்லார்க் |   |  
|   | 
கெய்தா விடருளவே யெங்கெங் |   |  
|   | 
  கென்றத் திசைநோக்கி |   |  
|   | 
வெய்தா வடிதொழுது வேந்தன் |   |  
|   | 
  கோயிற் கெழுந்தானே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) அஃதே? அடிகளும் உளரோ? என்றாற்கு - நீர் கூறிய அதுவோ? அடிகளும் உள்ளாரோ? என்ற சீவகனுக்கு; அருளுமாறு இருந்த ஆ இஃதா என்றார்க்கு - தெய்வம் அருள் இருந்தபடி இத் தன்மைத்தாக இருந்தது என்றார்க்கு; என்னைப் பெறவல்லார்க்கு எய்தா இடர் உளவே - என்னைப் பெறவல்ல தீவினை உடையார்க்கு எய்தா திருப்பன சில தீவினை இல்லை; எங்கு எங்கு என்று அத் திசை நோக்கி - அவரிருக்கின்ற திசை எங்கே எங்கே என்று கூறி அத் திசையை நோக்கி; வெய்தா அடி தொழுது - விரைய அடியை வணங்கி; வேந்தன் கோயிற்கு எழுந்தான் - (பின்பு) அரசன் கோயிலுக்குப் போனான். 
 | 
| 
    (வி - ம்.) முற்செய்யுளின்கண் என்னே! என்னே! என்னே! எனவும் இச்செய்யுளின்கண் எங்கு எங்கு (எங்கு) எனவும் அடுக்கு மாற்றால் இப்புலவர் பெருமான் சீவகன் மனநிலையை நம்மனோர்க் குணர்த்துகின்ற புலமைத்திறம் நினைந்து மகிழற்பாலாது. 
 | 
( 328 ) | 
|  1885 | 
இலைவிரவு பூம்பைந்தார் வேந்த |   |  
|   | 
  னேந்தல் குலங்கேட்பான் |   |  
|   | 
மலைவிரவு நீண்மார்பின் மைந்தன் |   |  
|   | 
  றோழர் முகநோக்கிக் |   | 
 
 
 |