கனகமாலையார் இலம்பகம் |
1066 |
|
|
1885 |
கொலைவிரவு கூர்நுதி வேற்குமர | |
|
னென்னக் குருகுலத்தான் | |
|
கலைவிரவு தீஞ்சொல் லார்காம | |
|
னென்றார் கமழ் தாரார். | |
|
(இ - ள்.) இலைவிரவு பூம்பைந்தார் வேந்தன் - இலை விரவிய மலர்மாலை வேந்தன்; ஏந்தல் குலம் கேட்பான் - சீவகன் குலத்தைக் கேட்க வேண்டி; மலைவிரவு நீண் மார்பின் மைந்தன் தோழர் முகம் நோக்கி - மலை போன்ற அகன்ற மார்பினையுடைய சீவகனுடைய தோழர் முகத்தைப் பார்த்து; கொலைவிரவு கூர்நுதி வேல் குமரன் என்ன - கொலை பொருந்திய கூரிய நுனியையுடைய வேலேந்திய குமரன் என்று கூறிய அளவிலே; கலைவிரவு தீஞ்சொல்லார் கமழ்தாரார் - கலையறிவு பொருந்திய இனிய சொல்லாராகிய மணங்கமழ் மாலையார்; காமன் குருகுலத்தான் என்றார் - இக் காமன் குருகுலத்தான் என்றார்.
|
(வி - ம்.) மலைவிரவு : விரவு : உவம உருபு
|
வேந்தன்; தடமித்தன். கேட்பான் : வினையெச்சம். மைந்தன் என்றது சீவகனை. சொல்லார் காமன் குருகுலத்தான் என்றார் என்க. முன்னர் நந்தட்டனைத் தடமித்தன் வினவி நாடும் ஊரும் உணர்ந்திருந்தான், தடமித்தன் உணர விரும்பியவை நாடும் ஊரும் குலனும் ஆகும். இதனை 1852 ஆம் செய்யுளான் உணரலாம். ஆண்டு நந்தட்டன் குலங்கூறுமுன்னர் அவன் கூறலாகாதபடி புலவர் பெருமான் செய்வித்துக்கொண்டு ஈண்டு வெளிப்படுத்தமை காப்பியம் இனிமையுடையதாதற்கு இன்றியமையாதாயிற்று.
|
( 329 ) |
1886 |
அண்ணல் குருகுலத்தா னென்றால் | |
|
யான்முன் கருதியதென் | |
|
ணெண்ணம் வெளிப்பட்டான் கரந்த | |
|
மைந்த னெரிசெம்பொன் | |
|
வண்ண வரைமார்ப முயங்கி | |
|
நுண்ணூன் மதியாரோ | |
|
டெண்ணி வியநெறியால் விடுத்தான் | |
|
கோயில் புக்கானே. | |
|
(இ - ள்.) அண்ணல் குருகுலத்தான் என்றால் - தலைவன் குருகுலத்தான் எனின்; யான் முன் கருதியது - இது யான் முன் நினைத்த குலம்; என் எண்ணம் வெளிப்பட்டான் - என் எண்ணத்திலே வெளியானான்; (என்று எழுந்து) கரந்த மைந்தன் எரி செம்பொன் வண்ணமார்பம் முயங்கி - மறைந்திருந்த சீவகனுடைய ஒளிவிடும் பொன் மார்பிலே தழுவி; நுண் நூல் மதி
|