பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 107 

   (இ - ள்.) இழைகிளர் இளமுலை எழுதும் நுண்இடைத் தழைவளர் மதுவலர் தயங்கு பூஞ்சிகைக் குழைமுகக் கொடியொடு - பூண் விளங்குதற்குக் காரணமான இளமுலையும், ஓவியம் எழுதுவார்; இதன் தன்மை கருதி எழுதுதற்குக் காரணமான நுண்ணிடையும், தழையிலே வளர்ந்த தேன்பொருந்திய மலர் விளங்கும் அழகிய கூந்தலும், குழைபொருந்திய முகமும் உடைய கொடியுடன்; குருதி வேலினான் மழைமுகில் மாரியின் வைகும் - குருதி தங்கிய வேலையுடைய சச்சந்தன் மாரிக்காலத்து மழை முகில்போல அருள் பொழிந்து தங்கும்.

 

   (வி - ம்.) முலை முதலியவற்றையுடைய கொடி: இல் பொருளுவமை.

( 166 )
196 படுதிரைப் பவழவா யமுத மாந்தியுங்
கொடிவளர் குவிமுலைத் தடத்துள் வைகியு
மிடியினுங் கொடியினு மயங்கி யாவதுங்
கடிமணக் கிழமை யோர் கடலின் மிக்கதே.

   (இ - ள்.) படுதிரைப் பவழவாய் அமுதம் மாந்தியும் - கடலிற் பவழம்போலும் வாயின் அமுதத்தை உண்டும்; கொடிவளர் குவிமுலைத் தடத்துள் வைகியும் - கொடியில் வளரும் குவிந்த முலையில் தங்கியும், இடியினும் கொடியினும் யாவதும் மயங்கி - இடிக்கப்படும் மாவைப் போலவும் நூழிற் கொடி போலவும் உணர்வும் உடம்பும் எல்லாம் மயங்கி; கடிமணக் கிழமைஓர் கடலின் மிக்கது - அவர்களுடைய மிக்கதான கூட்டத்தின் உரிமை ஒரு கடலினும் மிகுந்தது.

 

   மாந்துதல் - பருகுதல். இடி - கூலங்களை இடித்த மா. கொடியினும் என்புழி கொடி நூழிற்கொடி. மணக்கிழமை என்றது, புணர்ச்சியின்பப்பேற்றினை.

( 167 )
197 கப்புரப் பசுந்திரை கதிர்செய் மாமணிச்
செப்பொடு சிலதிய ரேந்தத் தீவிய
துப்புமிழ்ந் தலமருங் காம வல்லியு
மொப்பரும் பாவைபோன் றுறையு மென்பரே.

   (இ - ள்.) கப்புரப் பசுந்திரை கதிர்செய் மாமணிச் செப்பொடு சிலதியர் ஏந்த - கருப்பூரத்தையும் பச்சை வெற்றிலையையும் ஒளிவிடும் மாணிக்கச் செப்பிலே சேடியர் ஏந்த; தீவிய துப்பு உமிழ்ந்து - ஐம்பொறிக்கும் இனிய நுகரும் பொருள்களைத் தானும் கணவனுமாக நுகர்ந்து; அலமரும் காமவல்லியும் - புணர்ச்சிக்கு அலமரும் காமவல்லி போன்ற விசயையும்; ஒப்பு