| விமலையார் இலம்பகம் |
1072 |
|
|
| 1892 |
வேய்நிறத் தோளி னார்க்கு | |
வெண்டுகின் மாலை சாந்தந் | |
தானல கலங்கள் சோ்த்தித் | |
தடமுலை தோய்க வென்றான். | |
|
|
(இ - ள்.) தோய்தகை மகளிர்த் தோயில் - கூடுதற்குரிய மகளிரைக் கூட வேண்டின்; மெய் அணி நீக்கி - அம் மகளிரின் மெய்யில் அணிந்த பூணை நீக்கி; ஆய்முது மகளிர் தம்மால் அரில் தபத் திமிரி ஆட்டி - ஆராய்ந்து தெளிந்த மூப்பியராலே குற்ற மின்றித் திமிர்ந்து தூய நீராட்டி; வேய்நிறத் தோளினார்க்கு - மூங்கிலனைய ஒளியுறுந் தோளையுடைய அம் மகளிர்க்கு; வெண்துகில் மாலை சாந்தம் நலகலங்கள் சேர்த்தி - வெண்மையான ஆடையும் மாலையும் சந்தனமும் நல்ல கலன்களும் சேர்த்தி; தான் தடமுலை தோய்க என்றான் - பின்னரே அரசன் அம் மகளிரின் பெரிய முலைகளைத் தழுவுக என்றான்.
|
|
(வி - ம்.) தோய்தகை - கூடுதற்குரிய தகுதி, எனவே ஏனைய மகளிரை எவ்வாற்றானும் கூடுதல் கூடாது என்றானுமாயிற்று. அம் முதுமகளிரும் ஆராய்ந்து தெளியப்பட்டவராதல் வேண்டும் என்பான் ஆய்முது மகளிர் தம்மால் என்றான். திமிர்தல் - பூசுதல், வேய்நிறத் தேளினார்க்கு என்றது அவர்க்கு என்றவாறு. நஞ்சு முதலியன ஊட்டப் பெறாமையுணர்தற்கு வெண்டுகில் கூறினான். வஞ்ச அணிகலன் அல்லாமையுணர்தற்கு நலகலன் கூறினான். இச் செயலை எல்லாம் சாணக்கியர் பொருள் நூலில் விரிவாகக் காணலாம்.
|
( 4 ) |
| 1893 |
வண்ணப்பூ மாலை சாந்தம் | |
வாலணி கலன்க ளாடை | |
கண்முகத் துறுத்தித் தூய்மை | |
கண்டலாற் கொள்ள வேண்டா | |
வண்ணலம் புள்ளோ டல்லா | |
வாயிரம் பேடைச் சேவ | |
லுண்ணுநீ ரமிழ்தங் காக்க | |
யூகமோ டாய்க வென்றான். | |
|
|
(இ - ள்.) வண்ணப்பூ மாலை சாந்தம் வால் அணிகலன்கள் ஆடை - அழகிய மலர்மாலை சந்தனம் தூய பூண்கள் ஆடை முதலியவற்றை; அண்ணல் அம்புள்ளோடு அல்லா ஆயிரம் பேடைச் சேவல் - அரச வன்னமும் அதுவே அன்றி ஆயிரம் பெடையுடன் நிற்கும் சக்கரவாகப் புள்ளும் ஆகிய இவற்றின்; கண் முகத்து உறுத்தி - கண்ணினும் முகத்தினும் பொருத்தி; தூய்மை கண்டலால் கொள்ளவேண்டா - தூய்மை கண்டல்லது
|