| விமலையார் இலம்பகம் |
1074 |
|
|
|
(இ - ள்.) பொருந்தலால் பல்லி போன்றும் - விடாமல் இவனிடத்திருத்தலாற் பல்லியைப் போன்றும்; போற்றலால் தாயர் ஒத்தும் - வேண்டுவன தந்து காப்பாற்றலால் அன்னையர் போன்றும்; அருந்தவர் போன்று காத்தும் - அருந்தவர் சீல முதலியவை தப்பாமற் காக்குமாறு போல இவற்கும் அவை தப்பாமற் காத்தும்; அடங்கலால் ஆமை போன்றும் - ஐம்பொறியும் தமக்கு அடங்கலின் ஆமை போன்றும்; திருந்து வேல் தெவ்வர் போலத் தீது அற எறிந்தும் - திருந்திய வேலேந்திய பகைவர் போன்று இவனுக்குண்டான தீது தீரும்படி இடித்துக் கூறியும்; இன்பமருந்தினால் மனைவி ஒத்தும் - இன்பந்தரும் உணவுகளை நுகர்வித்தலால் மனைவியை போன்றும்; மதலையைக் காமின் என்றான் - நமக்கு ஆதரவான சீவகனைக் கப்பாற்றுமின் என்றான்.
|
|
(வி - ம்.) மதலை - ஆதரவு; தூண். 'வானம் ஊன்றிய மதலை போல' (பெரும்பாண். 346) என்றார் பிறரும். தாம் அடங்கியே இவனை அடக்கல் வேண்டுமெனக் கூறுகின்றவன் இங்ஙனங் கூறினானென்க. பதுமுகனிடங் கூறினானெனினும் பலரும் கேட்டலின்,. 'காமின்' என்றான்.
|
|
தான் வாழும் மரமுதலியவற்றில் நன்கு பொருந்தியிருத்தல் பல்லிக் கியல்பு. ”அச்சுடைச் சாகாட்டாரம் பொருந்திய சிறுவெண் பல்லி போல” என்றார் புறத்தினும் (256). ”ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின்” என்றார் வள்ளுவர். பகைவர் போன்று கண்ணற இடித்துரைத்தும் என்றவாறு, மருந்து - அடிசில். மதலை - பற்றானவன்.
|
( 7 ) |
| 1896 |
பூந்துகின் மாலை சாந்தம் புனைகலம் பஞ்ச வாச | |
மாய்ந்தளந் தியற்றப் பட்ட படிசினீ ரின்ன வெல்லா | |
மாந்தரின் மடங்க லாற்றற் பதுமுகன் காக்க வென்றாங் | |
கேந்துபூண் மார்ப னேவ வின்னண மியற்றி னானே. | |
|
|
(இ - ள்.) பூந்துகில் மாலை சாந்தம் புனைகலம் பஞ்சவாசம் - பூந்துகிலும் மாலையும் சாந்தமும் பூணும் முகவாசம் ஐந்தும்; ஆய்ந்து அளந்து இயற்றபப்பட்ட அடிசில் நீர் இன்ன எல்லாம் - ஆராய்ந்து பார்த்துச் செய்யப்பட்ட உணவும் நீரும் இத் தன்மையானவற்றை யெல்லாம்; மாந்தரின் மடங்கல் ஆற்றல் பதுமுகன் காக்க என்று - மக்களிலே சிங்கம் போன்ற ஆற்றலையுடைய பதுமுகன் காப்பானாக என்று; ஏந்து பூண் மார்பன் ஏவ - விளங்கும் பூணணிந்த மார்பனாகிய சீவகன் பணிக்க; இன்னணம் இயற்றினான் - அவனும் இப்படிக் காத்தலை நடத்தினான்.
|
|
(வி - ம்.) பஞ்சவாசம் : தக்கோலம் தீம்பூத் தகைசால் இலவங்கம், கப்பூரம் சாதியோடைந்து மடங்கலாற்றல் - சிங்கத்தை ஒத்த வலிமை.
|