விமலையார் இலம்பகம் |
1076 |
|
|
(இ - ள்.) வெவ்வாய் வெருகினைப் பூசை என்றலும் (தொல். மரபு - 68) என்றார்.
|
எலி அகழும் சாதிலிங்கம் தாழ்வரையில் சொரிந்து கிடப்பனவாக அத் தோற்றம் யானை நுதலிற் கச்சுப்போலத் தோன்றிற்று என்பதாம். பூசை - பூனை. இங்குலிகம் - சாதிலிங்கம். அஞ்சனவரை - கரிய தாழ் வரை. கவழம் - கவளம்.
|
( 10 ) |
1899 |
அண்ணலங் குன்றின்மேல் வருடைபாய்ந் துழக்கலி | |
னொண்மணி பலவுடைந் தொருங்கவை தூளியாய் | |
விண்ணுளு வுண்டென வீழுமா நிலமிசைக் | |
கண்ணகன் மரமெலாங் கற்பக மொத்தவே. | |
|
(இ - ள்.) அண்ணல் அம் குன்றின்மேல் - பெரிய குன்றுகளின்மேல்; வருடை பாய்ந்து உழக்கலின் - வருடை மான் பாய்ந்து மிதித்தலின்; ஒண் மணி பல உடைந்து - சிறந்த மணிகள் பலவும் உடைந்து; அவை ஒருங்கு தூளியாய் - அவை ஒருசேரச் செந்தூளியாய்; விண் உளு வுண்டு என மா நிலமிசை வீழும் - அத்தூளி வானுலக உளு வுண்ட தென்னும்படி பெரிய நிலத்திலே வீழா நிற்கும்; கண் அகல் மரம் எலாம் கற்பகம் ஒத்த - (அஃது அங்ஙனம் வீழ்தலின்) பரப்புடைய நிலத்தின் மரங்கள் யாவும் அத்தூளி போர்த்துக் கற்பகத்தைப் போன்றன.
|
(வி - ம்.) அண்ணலங்குன்று - பெரிய அழகிய மலை. வருடை - மலையாடு, உளுவுண்டென - உளுத்தது என்னும்படி. கற்பகம் - வானுலகத்துள்ளவொரு மரம்.
|
( 11 ) |
1900 |
மானிடம் பழுத்தன கிலுத்தமற் றவற்றியற் | |
பான்முரட் பயம்பிடைப் பனைமடிந் தனையன் | |
கானிடைப் பாந்தள்கண் படுப்பன துயிலெழ | |
வூனுடைப் பொன்முழை யாளிநின் றுலம்புமே. | |
|
(இ - ள்.) கிலுத்தம் மானிடம் பழுத்தன - கிலுத்தம் என்னும் மரம் மக்கள் வடிவாகப் பழுத்தனவாய் இருந்தன. மற்று அவற்று அயல் கானிடை - பின்னை, அவற்றின் அயலிலே கானிடையிலே; பால் முரண் பயம்பிடை - பால்போல வெண்மையான ஏற்றிழிவுடைய நிலத்திற் குழியிடையிலே; பனை மடிந்தனையன பாந்தள் - பனை கிடந்தனையவாகிய பாம்புகள்; கண் படுப்பன துயில் எழ - துயில்வன துயில் எழும்படி; ஊன் உடைப் பொன் முழை யாளி நின்று உலம்பும் - ஊன் பொருந்தியதனாற் பொன் போன்ற குகையிலிருந்து யாளிகள் முழங்கும்.
|
(வி - ம்.) முரண் மாறுபாடு. 'முரட் பரம்பு' எனவும் பாடம். 'மானிடம் பழுக்கும் கிலுத்தம் நீள் வனம்' (கூர்ம - சம்பு - 32). கிலுத்தம் - ஒருவகை மரம்.
|
( 12 ) |