பக்கம் எண் :

விமலையார் இலம்பகம் 1102 

   (வி - ம்.) அம்பா - அம்பாக. சாற்றி - அமைத்து. மைந்தனை : சீவகனை. மானெடுங்கண், மழைக்கண் எனத் தனித்தனி கூட்டுக. நோக்கி - நோக்கினையுடையாள். பாவை - ஈண்டு விமலை.

( 63 )

வேறு

1952 குழன்மலிந்த கோதைமாலை பொங்கவெங் கதிர்ம்முலை
நிழன்மலிந்த நோ்வடந்நி ழற்படப்ப டைத்தர
வெழின்மணிக்கு ழைவில்வீச வின்பொனோலை மின்செய
வழன்மணிக்க லாபமஞ்சி லம்பொடார்ப்ப வாடுமே.

   (இ - ள்.) குழல் மலிந்த கோதை மாலை பொங்க - குழலில் மிகுந்த கோதையும் மாலையும் பொங்க; வெங்கதிர்முலை - விருப்பமூட்டும் கதிர்த்த முலை மிசை; நிழல் மலிந்த நேர்வடம் நிழல் படப் புடைத்தர - ஒளி நிறைந்த அழகிய முத்துவடம் ஒளியுறப்புடைக்க; எழில் மணிக் குழை வில்வீச - அழகிய மணிகளிழைத்த குழை ஒளிவீச; இன்பொன் ஓலை மின் செய - இனிய பொன் ஓலை ஒளியை உண்டாக்க; அழல் மணிக்கலாபம் அம்சிலம்பொடு ஆர்ப்ப ஆடும் - நெருப்பனைய நிறமுடைய மணிகளால் ஆகிய கலாபம் அழகிய சிலம்புடன் ஆரவாரிக்கப் பந்தாடுகின்றாள்.

( 64 )
1953 அங்கையந்த லத்தகத்த வைந்துபந்த மர்ந்தவை
மங்கையாட மாலைசூழும் வண்டுபோல வந்துடன்
பொங்கிமீதெ ழுந்துபோய்ப்பி றழ்ந்துபாய்த லின்றியே
செங்கயற்கண் புருவந்தம்மு ளுருவஞ்செய்யத் திரியுமே.

   (இ - ள்.) அங்கை அம் தலத்தகத்த ஐந்து பந்து அமர்ந்தவை - அகங்கையாகிய அழகிய இடத்தில் ஐந்து பந்துகள் அமர்ந்தவை; மங்கை ஆட - மங்கை ஆடுதலாலே; மாலைசூழும் வண்டுபோல வந்து - மாலையைச் சூழும் வண்டுபோலக் கீழே வந்து; உடன் பொங்கி மீது எழுந்து போய் - உடனே பொங்கி மேலேழுந்து சென்று; பிறழ்ந்து பாய்தல் இன்றி - முறை குலைந்து வீழ்தலின்றி; செங்கயற்கண் புருவம் தம்முள் உருவம் செய்யத் திரியும் - செவ்விய கயற்கண்ணும் புருவமும் கூடத்திரிந்து அழகு செய்யுமாறு திரியும்.

   (வி - ம்.) 'வண்டு போலப் பொங்கி மீதெழுந்து போய் உடனே வந்து' என மாற்றியுரைப்பர் நச்சினார்க்கினியர்.

( 65 )
1954 மாலையுட்க ரந்தபந்து வந்துகைத்த லத்தவா
மேலநாறி ருங்குழற்பு றத்தவாண்மு கத்தவா
நூலினோ்நு சுப்புநோவ வுச்சிமாலை யுள்ளவா
மேலெழுந்த மீநிலத்த விரலகைய வாகுமே.