நாமகள் இலம்பகம் |
111 |
|
(வி - ம்.) அரிஞ்சயன் : விசயை பாட்டன். வசையிலாள் : வினையெச்சமுற்று. 'வேண்டும்' என்பது உம்மீற்றான் வந்ததோர் ஏவல் கண்ணிய வியங்கோள் : 'வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்' (புறநா. 367) என்றார் பிறரும்.
|
( 172 ) |
202 |
அண்ணறா னுரைப்பக் கேட்டே யடுகளிற் றெருத்தி னிட்ட |
|
வண்ணப்பூந் தவிசு தன்னை ஞமலிமே லிட்ட தொக்குங் |
|
கண்ணகன் ஞாலங் காத்தல் எனக் கெனக் கமழுங் கண்ணி |
|
மண்ணகம் வளருந் தோளான் மறுத்துநீ மொழீய லென்றான். |
|
(இ - ள்.) அண்ணல்தான் உரைப்பக் கேட்டு - (கட்டியங்காரன்) தான் கருதியிருந்jதனை அரசனே கூறக்கேட்டு (மகிழ்ந்து); எனக்குக் கண்அகல் ஞாலம் காத்தல் - என் நிலையில் இடமகன்ற உலகை ஆளுவது; அடுகளிற்று எருத்தின் இட்ட வண்ணப் பூந்தவிசு தன்னை ஞமலிமேல் இட்டது ஒக்கும் -அடுகளிற்றின் கழுத்தில் இட்ட அழகிய கழுத்து மெத்தையை நாயின் மேல் இட்டது போலாகும்; என - என்று கூறி மறுப்ப ; கண்ணி கமழும் மண்ணகம் வளரும் தோளான் - மாலை மணக்கும் நில உலகம் வாழும் தோளையுடைய மன்னன்; நீ மறுத்து மொழியல் என்றான் - என்பொருட்டாக நீ மறுத்துக் கூறாதே என்றான்.
|
|
(வி - ம்.) தவிசு - கழுத்து மெத்தை. 'மண் எழுவனைய தோள்' பாடமாயின், 'பண்ணிய எழு' ஆம்; 'ஆவுதி மண்ணி' (மதுரைக். 494) என்றாற்போல. 'தோளாய்' என்பதும் பாடம்.
|
|
இச் செய்யுட்கு நச்சினார்க்கினியர், தன் தலைவன்பால் ஒப்பற்ற அன்புடையதாய் அவனால் செயப்படுந் துன்பத்தையும் பொருட்படுத்தாமல் எறிந்த வேல் மெய்யதா வால்குழைக்கும் நாயினையே தனக்கு உவமை கூறிக்கொண்டான் கட்டியங்காரன் சச்சந்தன் தன்னை ஐயுறாமைப் பொருட்டென்பது பட” வேறோரூர்தி கூறாது ஞமலியைக் கூறினான் அவன் அயிராது தருதற்கு” என்று கூறியது ஆற்றவும் இன்பமுடைத்து.
|
( 173 ) |
203 |
எழுதரு பருதி மார்ப னிற்றென விசைத்த லோடுந் |
|
தொழுதடி பணிந்து சொல்லுந் துன்னலர்த் தொலைத்த வேலோய் |
|
கழிபெருங் காத லாள்கட் கழிநலம் பெறுக வையம் |
|
பழிபடா வகையிற் காக்கும் படுநுகம் பூண்பல் என்றான். |
|
(இ - ள்.) எழுதரு பருதிமார்பன் இற்றுஎன இசைத்தலோடும் - காலை யிளஞாயிறு போலும் மார்பனான சச்சந்தன் என்னிலைமை இத்தன்மைத்து என்று கூறிய அளவிலே; தொழுது அடிபணிந்து - அடியைத் தொழுது கும்பிட்டு; சொல்லும் துன்னலர்த் தொலைத்த வேலோய் - கூறப்படும் பகைவரை
|
|