பக்கம் எண் :

விமலையார் இலம்பகம் 1110 

   (இ - ள்.) தௌ் நீர்ப் பனிக் கயத்து மட்டு அவிழ்ந்த தேன் குவளை - தெளிந்த நீரையுடைய தண்ணிய சிறிய குளத்தே தேனுற மலர்ந்த குவளை போலும்; கண் நீர்மை காட்டி - கண்ணின் தன்மையைக் கொண்டு ; ஒரு நோக்கினின் - அதன் ஒரு நோக்கினாலே ; கடல்போல் அகன்ற என் உள் நீர்மை எல்லாம் கவர்ந்த - கடல்போலப் பரந்த என் உள்ளிருக்கும் அறிவையெல்லாம் கவர்ந்த ; பெண் நீர்மை மேல்நாள் பிறந்தும் அறியுமோ? - இத்தகைய பெண்தன்மை முன்னாளிலும் பிறந்தறியுமோ?

   (வி - ம்.) இன்று என்னை வருத்துதற்கே புதியதாய்த்தோன்றியது என்று கருதினான்.

   கயம் - குளம். மட்டு-தேன். கண்ணீர்மை-கண்ணின் தன்மை. ஒரு நோக்கினின் அவள் மனத்தினாய காமக் குறிப்பினை வெளிப்படுக்கின்ற நோக்கு. ”இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு, நோய்நோக்கொன்று அந்நோய் மருந்து”என்றார் திருவள்ளுவனாரும் (குறள். 1091)

( 80 )
1969 கருங்குழலுஞ் செவ்வாயுங் கண்மலருங் காது
மரும்பொழுகு பூண்முலையு மாருயிர்க்கே கூற்றம்
விருந்தினராய் வந்தாரை வெற்றுடலா நோக்கும்
பெருந்திருவி யார்மகள் கொல் பேரியா தாங்கொல்லோ.

   (இ - ள்.) கருங்குழலும் செவ்வாயும் கண்மலரும் காதும் அரும்பு ஒழுகு பூண் முலையும் - கரிய கூந்தலும் சிவந்த வாயும் மலர் போன்ற கண்ணும் காதும் அரும்பெனப் பொருந்திய பூண் அணிந்த முலையும்; ஆர் உயிர்க்கே கூற்றம் - என சிறந்த உயிருக்கே கூற்றமாகக் கொண்டு; விருந்தினராய் வந்தாரை வெற்றுடலாம் நோக்கு - புதியவராக வந்தவர்களை உயிர் நீங்கிய உடலாகும்படி நோக்குகின்ற ; பெருந்திருவி யார் மகள் கொல் ? - பெரிய செல்வி யாருடைய மகளோ?; பேர் யாது ஆம் கொல்லோ?- பெயர் யாதோ?

   (வி - ம்.) பெயர் கூற்றமோ? பெண்ணோ? என்று நினைத்தான்.

   கருங்குழலுஞ் செவ்வாயும் என்புழிச் செய்யுளின்பம் உணர்க. இவற்றுள் ஒன்றே உயிர்க்குக் கூற்றம் ஆதல் அமையுமே உயிர்க்கு இத்தனை கூற்றமும் வேண்டுமோ என்பான் ஆருயிர்க்கே கூற்றம் என்றான். விருந்தினராய் வந்தார் - புதியராய் வந்தோர்.

( 81 )
1970 வாருடுத்த வெம்முலைய
  வண்டார்பூங் கோதையைப்
போ்கொடுத்தார் பெண்ணென்றார்
  கூற்றமே யென்றிட்டாற்