| விமலையார் இலம்பகம் |
1114 |
|
|
| 1976 |
தும்பியாது மில்லாக் குளம்போன்றதென் | |
றோமில் பண்டங் | |
கூம்பாத செல்வக் கொடியேயிது | |
கேண்மோ வென்றான். | |
|
|
(இ - ள்.) பூம்பாவை வந்து பிறந்தாள் - பூம்பாவை பேன்றாள் வந்து பிறந்தாள்; அப் பிறந்த போழ்தே - அப்படிப் பிறந்த பொழுதே; ஆம்பால எல்லாம் அறிவார் அன்று எழுதியிட்டார் - ஆகும் பகுதியின் யாவையும் அறிந்த கணிகள் அன்று பிறந்த குறிப்பு எழுதிவிட்டனர் ; தூம்பு யாதும் இல்லாக் குளம் போன்றது என் தோம் இல் பண்டம் -(அப்பொழுதிருந்தே) போகும் வழி ஏதும் இல்லாத குளம் போல நிறைந்தது என் குற்றமில்லாத பண்டம்; இது கூம்பாத செல்வக் கொடியே - இதுவும் நினக்குக் குறையாத செல்வம் வருவதற்குரிய ஒழுங்கேயாகும்; இது கேள் என்றான் - இது கேள் என்று அக்கணி கூறினான்.
|
|
(வி - ம்.) கேண்மோ, மோ : முன்னிலையசை. கொடி - ஒழுங்கு ; 'கொடிக் கூரை' (புறநா. 22) என்றார் பிறரும்.
|
|
பூம்பாவை: விமலை. பிறந்த அப்பொழுதே என மாறுக. தூம்பு - ஈண்டு நீர் கழியும் வழி. தோம் - குற்றம்.
|
( 88 ) |
| 1977 |
மங்கைக் குரியான் கடையேறும்வந் தேற லோடும் | |
வங்கந் நிதிய முடன்வீழுமற் றன்றி வீழா | |
தெங்குந் தனக்கு நிகரில்லவ னேற்ற மார்ப | |
நங்கைக் கியன்ற நறும்பூவணைப் பள்ளி யென்றான். | |
|
|
(இ - ள்.) மங்கைக்கு உரியான் கடைஏறும் - இம்மங்கைக்குத் தக்கவன் நின்கடையில் வந்து அமர்வான்; வந்து ஏறலோடும் - வந்து அமர்ந்த வுடனே; வங்கம் நிதியம் உடன் வீழும் - மரக்கலத்திலே ஈட்டப்பட்ட செல்வம் ஒரு சேர உன்கடையில் தங்கம் ; அன்றி வீழாது-இங்ஙனம் அன்றிப் பொருள் தங்காது; எங்கும் தனக்கு நிகரில்லவன் ஏற்ற மார்பம் - எங்கும் தனக்கு ஒப்பற்ற அவனுடைய தகுதியான மார்பமே; நங்கைக்கு இயன்ற நறும் பூவணைப் பள்ளி என்றான்-விமலைக்குப் பொருந்திய மணமலர் நிறைந்த அணையாகிய சேக்கை என்று கணி கூறினான்.
|
|
(வி - ம்.) மற்று : அசை.
|
|
மங்கைக்கு : விமலைக்கு. உரியான் - உரிய கணவன். வங்கம் நிதியம் - மரக்கலத்தாலீட்டப்பட்ட பொருள் என்க. மற்று அன்றி வீழா என்பது அவளுக்குரிய கணவன் வந்தாலன்றிப் பொருள் சேராது என்பதைக் காட்டியது. மார்பம் பூவணைப்பள்ளியாம் என்க.
|
( 89 ) |