விமலையார் இலம்பகம் |
1116 |
|
|
1980 |
அம்பொற் கொம்பனை யாளையும் வார்கழற் | |
செம்பொற் குன்றனை யானையுஞ் சீர்பெறப் | |
பைம்பொ னீணகர்ப் பல்லிய மார்த்தெழ | |
விம்ப ரில்லாதோ ரின்ப மியற்றினார். | |
|
(இ - ள்.) அம் பொன் கொம்பு அனையாளையும் - அழகிய பொற்கொடி போன்றவளையும்; வார்கழல் செம்பொன் குன்று அனையானையும் - கட்டிய கழலையுடைய பொன்மலை போன்றவனையும்; பைம்பொன் நீள் நகர்ப் பல் இயம் ஆர்த்து எழு - புதிய பொன்னாலமைத்த பெரிய மனையிலே பல இயங்களும் முழங்கா நிற்க; சீர் பெற - சிறப்புற; இம்பர் இல்லது - இவ்வுலகில் இல்லதாகிய; ஓர் இன்பம் இயற்றினார் - ஒப்பற்ற மணத்தைப் புரிந்தனர்.
|
(வி - ம்.) மணத்தை இன்பம் என்றது கருவி ஆகுபெயர்.
|
கொம்பனையாள் : விமலை. குன்றனையான் : சீவகன். பல்லியம் - பலவாகிய இசைக்கருவிகள். இம்பர் - இவ்வுலகம். இன்பம் இயற்றினார் என்றது. திருமணம் இயற்றினர் என்றவாறு.
|
( 92 ) |
1981 |
கட்டி லேறிய காமரு காளையும் | |
மட்டு வாயவிழ் மாமலர்க் கோதையும் | |
விட்டு நீங்குத லின்மையின் வீவிலா | |
ரொட்டி யீருடம் போருயி ராயினார். | |
|
(இ - ள்.) கட்டில் ஏறிய காமரு காளையும் - கட்டிலில் அமர்ந்த விருப்பம் வருதற் கான காளையும்; மட்டு வாய் அவிழ் மாமலர்க் கோதையும் - தேன் பொருந்திய வாய் மலர்ந்த பெருமை பொருந்திய மலர்க் கோதையாளும்; விட்டு நீங்குதல் இன்மையின் - விட்டு நீங்கி நுகரும் தன்மை இல்லாமையால்; வீவு இலார் - கெடுதல் இல்லாதவராய்; ஒட்டி ஈருடம்பு ஓர் உயிர் ஆயினார் - மனம் ஒன்றி ஈருடம்பும் ஓருயிரும் என ஆயினார்.
|
(வி - ம்.) 'கட்டில் ஏறிய - பிணைப்பினையுடைய இல்வாழ்க்கையிலே, சென்ற' என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர்!
|
கட்டிலேற்றுதல் ஒரு சடங்கு. மட்டு - தேன். கோதை : விமலை. உயிர் ஒன்றெனவே மனமுமொன்றென்பது போதரும்.
|
( 93 ) |
1982 |
நிலவு வெண்கதிர் நீர்மைய பூந்துகில் | |
கலவங் கண்புதை யாது கனற்றலி | |
னுலக மூன்று முறுவிலைத் தென்பவே | |
புலவு வேற்கண்ணி னாண்முலைப் போகமே. | |
|