பக்கம் எண் :

விமலையார் இலம்பகம் 1117 

   (இ - ள்.) நிலவு வெண் கதிர் நீர்மைய பூந்துகில் - நிலவு போல வெண்கதிர் பரப்பும் தன்மையுடைய அழகிய ஆடை; கலவம் கண் புதையாது - மேகலையை மறையாமல்; கனற்றலின் - தானே நெகிழ்ந்து அவனைக் கனற்றுவதாலே; புலவு வேற் கண்ணினாள் முலைப் போகம் - புலால் கமழும் வேலனைய கண்ணினாளின் முலைப்போகமானது; உலகம் மூன்றும் உறுவிலைத்து என்ப - மூன்றுலகையும் பெறுகின்ற விலையுடையது என்பர்.

   (வி - ம்.) அவள் கொளுத்த அவன் கோடலிற் கனற்றுதல் அவள் மேலாயிற்று.

( 94 )
1983 தேன வாங்கமழ் கண்ணியுந் தெவ்வர்த
மூன வாங்கதிர் வேலுறு காளையுங்
கான வாங்கடி நாறுமென் பள்ளிமேல்
வான வாம்வகை யால்வைகி னார்களே.

   (இ - ள்.) தேன் அவாம் கமழ் கண்ணியும் - வண்டுகள் விரும்பும் மணங்கமழ் கண்ணியும்; தெவ்வர் தம் ஊன் அவாம் கதிர்வேல் உறு காளையும் - பகைவருடைய ஊனை விரும்பும் கதிர் வேல் கைக்கொண்ட காளையும்; கான் அவாம் கடிநாறும் மென்பள்ளிமேல் - கானம் விரும்பும் மணங் கமழும் மெல்லிய பள்ளியின் மேல்; வான் அவாம் வகையால் வைகினார்கள் - விண்ணும் விழையும் வகையில் இன்பம் நுகர்ந்தனர்.

   (வி - ம்.) விண்ணுலகு இன்பம் நுகரும் இடமாகையால் அவரும் விரும்பும் வகையால் என்றார். இத்துணையும் மணம் புரிந்துகொண்ட அன்றைய நுகர்ச்சி கூறப்பட்டது.

( 95 )

வேறு

1984 வெண்மதி நெற்றி தேய்த்து
  விழுத்தழும் பிருப்ப நீண்ட
வண்ணனன் மாடத் தங்க
  ணகிற்புகை யமளி யேறிப்
பண்ணமை மகர வீணை
  நரம்புரீஇப் பாவை பாட
மண்ணமை முழவுத் தோளான்
  மகிழ்ச்சியுண் மயங்கி னானே.

   (இ - ள்.) வெண்மதி நெற்றி தேய்த்து - வெண்திங்களின் தலை தேய்த்தலின்; விழுத் தழும்பு இருப்ப நீண்ட - சிறந்த தழும்பு இருக்கும்படி நீண்ட; அண்ணல் நல்மாடத்து அங்கண் -