பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1128 

1997 அம்பொ ரைந்து டைய்ய காம
  னைய்ய னென்ன வந்தண
னம்பு நீர ரல்லர் நன்கு
  ரங்கு நீர ராயினுந்
தங்கு ரவ்வர் தாங்கொ டுப்பி
  னெஞ்சு நோ்ந்து தாழ்வர்தாம்
பொங்க ரவ்வ வல்கு லாரெ
  னப்பு கன்று சொல்லினான்.

   (இ - ள்.) ஐயன் ஒரைந்து அம்புடைய காமன் என்ன - சீவகன் ஐந்து மலர்க் கணைகளையுடைய காமன் என்று தோழர்கள் வியந்தாராக; அந்தணன் - (அதுகேட்ட) புத்தி சேனன்; நம்பு நீரர் அல்லர் நன் குரங்கு நீரர் ஆயினும் - தம்மால் விரும்பப்படும் தன்மையிலராய் நல்ல குரங்கினியல்பை உடையராயினும்; தம் குரவர் தாம் கொடுப்பின் - தம் பெற்றோர் கொடுப்பாராயின்; பொங்கு அரவ அல்குலார் நெஞ்சு நேர்ந்து தாழ்வர் - சீறும் பாம்பின் படம் போன்ற அல்குலையுடைய குடிப்பிறந்த மகளிர் மனம் ஒப்பி அவரை வழிபடுவர்; எனப் புகன்று சொல்லினான் - என்று நகையாடலை விரும்பிக் கூறினான்.

   (வி - ம்.) நம்பு - விருப்பம், நன்குரங்கு - பொல்லாங்குக்கு நன்றான குரங்கு. பெற்றோர் குரங்கு நீரருக்குத் தம்மைக் கொடுப்பினும் நெஞ்சு நேர்ந்து வழிபடுவர் என்றான்.

( 3 )
1998 அற்று மன்று கன்னி யம்ம டந்தை மார ணிநலம்
முற்றி னாரை நீடு வைப்பின் மூள்கும் வந்து பாவமுங்
குற்ற மற்று மாகு மென்று கோதை சூழ்ந்து கூறினார்க்
குற்ற டுத்த யாவு யிர்த்தொழிதல் யார்க்கு மொக்குமே.

   (இ - ள்.) அற்றும் அன்று - அத்தன்மையது மட்டும் அன்று; கன்னி அம் மடந்தைமார் - கன்னியராகிய அம் மகளிரை; அணிநலம் முற்றினாரை நீடு வைப்பின் பாவமும் வந்து மூள்கும் - அழகன் நலம் முதிர்ந்தவராக நீண்ட நாள் வைத்திருப்பின், அதனாற் பாவமும் வந்து மிகும்; மற்றும் குற்றம் ஆகும் - மேலும் குடிப் பழியும் உளதாம்; என்று - என்று கருதி; கூறினார்க்கு - பேசினார்க்கு; கோதை சூழ்ந்து உற்று அடுத்து - தாமே தம் மகளைச் சூழ்ந்து கொண்டு சென்று கொடுத்து; அயாவுயிர்த்து ஒழிதல் யார்க்கும் ஒக்கும் - தம்சுமை கழிந்து இளைப்புத் தீர்ந்து விடுதல் குடிப்பிறந்து பழி நாணுவார்க்கெலாம் ஒக்கும்.