சுரமஞ்சரியார் இலம்பகம் |
1133 |
|
|
மடந்தை தன் முகத்த - அம் மங்கையின் முகத்தனவாய்; என் மனத்தில் உள்ளன - என் உள்ளத்தில் உள்ளன
|
(வி - ம்.) மனத்திலுள்ளன என்றது, 'நங்கைகண் போலும் வேலவனே' (சீவக-896) என்று சொன்னதை உட்கொண்டு.
|
( 12 ) |
2007 |
ஏத்தரு மல்லிகை மாலை யேந்திய | |
பூத்தலைக் கருங்குழற் புரியி னாற்புறம் | |
யாத்துவைத் தலைக்குமிவ் வகுளி லாணலங் | |
காய்த்தியென் மனத்தினைக் கலக்கு கின்றதே. | |
|
(இ - ள்.) ஏத்த அரும் மல்லிகை மாலை ஏந்திய - புகழ்தற்கரிய மல்லிகை மாலையைச் சூடிய; பூத்தலைக் கருங்குழற் புரியினால் - பூவைத் தலைக்கொண்ட கருங்குழலாகிய கயிற்றினால்; புறம் யாத்து வைத்து அலைக்கும் - என புறத்தைப் பிணித்து வைத்து வருத்துகின்ற; இவ் அருளிலாள் நலம் - இந்த அருளில்லா தவளுடைய அழகு; என் மனத்தினைக் காய்த்திக் கலக்குகின்றது - என் உள்ளத்தைச் சுட்டு வருத்துகின்றது.
|
(வி - ம்.) 'ஏத்தரும்' என்பது, 'ஏத்துதல் தரும்' என்பதன் விகாரம் என்பர் நச்சினார்க்கினியர். காய்த்தி - வெம்மைப்படுத்தி; 'காடுகை காய்த்திய நீடுநாள் இருக்கை' (பதிற் : 12 : 9).
|
( 13 ) |
2008 |
சில்லரிக் கிண்கிணி சிலம்புஞ் சீறடிச் | |
செல்விதன் றிருநலஞ் சேரும் வாயிறா | |
னல்லலங் கிழவனோ ரந்த ணாளனாய்ச் | |
செல்லல்யான் றெளிதாக வுடைத்தென் றெண்ணினான். | |
|
(இ - ள்.) சில்அரிக் கிண்கிணி சிலம்பும் சீறடிச் செல்விதன் - சிலவாகிய பரல்களையுடைய கிண்கிணி ஒலிக்கும் சிற்றடியை உடைய செல்வியின்; திருநலம் சேரும் வாயில்தான் - அழகிய நலத்தை அடையும் வழிதான் : அல்லல் கிழவன் ஓர் அந்தணளனாய் யான் செல்லல் - பசிப்பிணியையுடைய முதியவனாகிய ஓர் அந்தணனாக யான் செல்வது; தெளிதகவு உடைத்து என்று எண்ணினான் - அவள் ஐயுறாத தெளிவுடையது என்று எண்ணினான்.
|
(வி - ம்.) சில்அரி - சிலவாகிய பரல்கள், சிலம்பும் - ஒலிக்கின்ற. சிறுமை + அடி = சீறடி. யான் செல்வல் என மாறுக. தெளிதகவு - தெளியும் தன்மை.
|
( 14 ) |
2009 |
அணங்கர வுரித்ததோ லனைய மேனியன் | |
வணங்குநோன் சிலையென வளைந்த யாக்கையன் | |
பிணங்குநூன் மார்பினன் பெரிதொர் பொத்தக | |
முணர்ந்துமூப் பெழுதின தொப்பத் தோன்றினான். | |
|