| சுரமஞ்சரியார் இலம்பகம் |
1134 |
|
|
|
(இ - ள்.) அணங்கு அரவு உரித்த தோல் அனைய மேனியன் - வருத்தும் பாம்பு உரித்த தோல் போன்ற மேனியனும்; வணங்குநோன் சிலையென வளைந்த யாக்கையன் - வளைந்த பெரிய வில்லென வளைந்த யாக்கையனும்; பிணங்கும் நூல் மார்பினன் - மேலாடையுடன் பிணங்கிய நூலணிந்த மார்பினனும் ஆகி; பெரிது ஓர் பொத்தகம் உணர்ந்து - மூப்பிலக்கணத்தையுடைய பெரிய ஒரு நூலை ஆராய்ந்து; மூப்பு எழுதினது ஒப்பத் தோன்றினான் - அம் மூப்பை எழுதியதைப்போலத் தோன்றினான்.
|
|
(வி - ம்.) அணங்கரவு : வினைத்தொகை மேனியன் - நிறமுடையன். நோன்சிலை - வலிய வில். யாக்கை - உடல். பொத்தகம் - நூல்; ஈண்டு, மூப்பிலக்கண நூல்.
|
( 15 ) |
| 2010 |
வெண்ணரை யுடம்பினன் விதிர்த்த புள்ளிய | |
னுண்ணவி ரறுலைய னொசிந்த நோக்கினன் | |
கண்ணவிர் குடையினன் கைத்தண் டூன்றினன் | |
பெண்ணலங் காதலிற் பேயு மாயினான். | |
|
|
(இ - ள்.) வெண்நரை உடம்பினர் - வெண்மையான நரை பொருந்திய மெய்யினனாய்; விதிர்த்த புள்ளியன் - தெறித்த புள்ளியனாய்; நுண்நவிர் அறுவையன் - நுண்ணிதாகக் கிழிந்த ஆடையனாய்; நொசிந்த நோக்கினன் - தலை வளைதலின் வளைந்த பார்வையனாய்; கண்நவிர் குடையினன் - கிழிந்த குடையினனாய்; கைத்தண்டு ஊன்றினன் - கையிலே ஒரு தண்டை ஆதரவாக ஊன்றியவனாய் : பெண் நலம் காதலின் பேயும் ஆயினான் - பெண்ணின் நலத்தைக் காதலித்தலின் பேயின் தன்மையும் ஆயினன்.
|
|
(வி - ம்.) 'பலிகொண்டு பெயரும் பாசம்போலத் திறைகொண்டு பெயர்தி' (பதிற். 78) என்றாற்போல. பெற்றே போதலின் பேயின் தன்மையன் ஆயினன், என்றார்.
|
( 16 ) |
| 2011 |
யாப்புடை யாழ்மிட றென்னுந் தோட்டியாற் | |
றூப்புடை யவணலந் தொடக்கும் பாகனாய் | |
மூப்பெனு முகபடாம் புதைந்து முற்றிழை | |
காப்புடை வளநகர் காளை யெய்தினான். | |
|
|
(இ - ள்.) யாப்பு உடை யாழ்மிடறு என்னும் தோட்டியால் - பிணிப்பையுடைய யாழையொத்த மிடறு என்னும் தோட்டியாலே; தூப்புடையவள் நலம் தொடக்கும் பாகனாய் - (ஆடவரை நீக்கின) தூய நெஞ்சிடத்தையுடையவள் நலத்தைப் பிணிக்கும் பாகனாய்; மூப்பு எனும் முகபடாம் புதைந்து - முதுமை என்னும் முகபடாத்திலே மறைந்து; முற்றிழை
|