சுரமஞ்சரியார் இலம்பகம் |
1149 |
|
|
வேறு
|
2040 |
இனிச்சிறி தெழுந்து வீங்கி | |
யிட்டிடை கோறு நாங்க | |
ளெனக்கொறு கொறுப்ப போலு | |
மிளமுலைப் பரவை யல்குற் | |
கனிப்பொறை மலிந்த காமர் | |
கற்பக மணிக்கொம் பொப்பாள் | |
பனிப்பிறைப் பூணி னான்றன் | |
பாண்வலைச் சென்று பட்டாள். | |
|
(இ - ள்.) இனி நாங்கள் சிறிது எழுந்து வீங்கி இட்டிடை கோறும் என - இந் நிலையில் நாங்கள் சிறிது எழுந்து பருத்துச் சிற்றிடையைக் கொல்வோம் என்று; கொறுகொறுப்ப போலும் இளமுலை - கொறுகொறுப்பன போலும் இளமுலையினையும்; பரவை அல்குல் - பரவிய அல்குலையும் உடைய; கனிப்பொறை மலிந்த காமர் கற்பக மணிக்கொம்பு ஒப்பாள் - பழமாகிய சுமை மிகுந்த அழகிய கற்பகக் கொம்பு போல்வாள்; பனிப்பிறைப் பூணினான் தன் பாண்வலைச் சென்று பட்டாள் - குளிர்ந்த பிறை யனைய பூணையுடைய சீவகனின் இசை வலையிலே போய் அகப்பட்டாள்.
|
(வி - ம்.) கொறுகொறுத்தல் : சினத்தலை உணர்த்தும் குறிப்புச் சொல்லாகிய இரட்டைக் கிளவி.
|
கோறும் : தன்மைப் பன்மை வினைமுற்று. கனிப்பொறை : பண்புத்தொகை. காமர் - அழகு. ஒப்பாள் : சுரமஞ்சரி. பூணினான் : சீவகன். பாண்வலை : பண்புத்தொகை. பாண் - பாட்டு.
|
( 46 ) |
2041 |
அடிக்கல மரற்ற வல்குற் | |
கலைகலந் தொலிப்ப வந்து | |
முடிப்பதென் பெரிது மூத்தேன் | |
முற்றிழை யரிவை யென்ன | |
வடிக்கணா ணக்கு நாணித் | |
தோழியை மறைந்து மின்னுக் | |
கொடிக்குழாத் திடையோர் கோலக் | |
குளிர்மணிக் கொம்பி னின்றாள். | |
|
(இ - ள்.) முற்றிழை அரிவை! அடிக்கலம் அரற்ற அல்குல் கலை கலந்து ஒலிப்ப வந்து முடிப்பது ஏன்? பெரிதும் மூத்தேன் என்ன - முற்றிழையுடைய அரிவையே! அடியில் அணிந்த சிலம்பு முதலியன ஒலிக்கவும், அல்குலில் அணிந்த கலைகள் கலந்து
|