| சுரமஞ்சரியார் இலம்பகம் |
1173 |
|
|
|
(இ - ள்.) பொன்வரை பொருத - பொன் மலையொடு போர் செய்த; யானைப்புணர் மருப்பு அனைய ஆகி - யானையின் இரண்டு கொம்புகளைப் போன்றனவாகி; தென்வரைச் சாந்து மூழ்கி - பொதியமலையின் சந்தனத்திலே முழுகி; திரள்வடம் சுமந்து வீங்கி - திரண்ட முத்தாரத்தைச் சுமந்து பருத்து; மின்வளர் மருங்குல் செற்ற - மின் கொடியென வளர்ந்த இடையை வருத்திய; வெம்முலை மணிக்கண் சேப்ப - வெவ்விய முலைகளின் நீலமணி போன்ற கண்கள் சிவக்க; தொல்நலம் பருகி - பழமையான நலத்தை நுகர்ந்து; தோன்றல் - சீவகன்; துறக்கம் புக்கவர்கள் ஒத்தான் - துறக்கத்தைச் சேர்ந்தவர்களைப் போன்றான்.
|
|
(வி - ம்.) பொன்வரை சீவகன் மார்புக்குவமை.
|
|
தென்வரை - பொதியமலை, வெம்முலை - விரும்புதற்குக் காரணமான முலை. மணிக்கண் - நீலமணி போன்று கறுத்த கண். சேப்ப - சிவப்ப. தோன்றல் பருகித் துறக்கம் புக்கவரை ஒத்தான் என மாறுக. துறக்கத்திற் புகுந்தவர் அரம்பையர் போகத்தையே நுகர்ந்திருப்பதால் ”ஒத்தான்” என்றார்.
|
( 87 ) |
| 2082 |
வரிக்கழற் குருசின் மார்பு | |
மடந்தைவெம் முலையுந் தம்முட் | |
செருச்செய்து திளைத்துப் போரிற் | |
சிலம்பொலி கலந்த பாணி | |
யரிப்பறை யனுங்க வார்க்கு | |
மேகலைக் குரலோ டீண்டிப் | |
புரிக்குழல் புலம்ப வைகிப் | |
பூவணை விடுக்க லானே. | |
|
|
(இ - ள்.) வரிக்கழல் குருசில் மார்பும் - வரிகளமைந்த கழலையுடைய சீவகன் மார்பும்; மடந்தை வெம்முலையும் - சுரமஞ்சரியின் வெவ்விய முலையும்; தம்முள் செருச்செய்து போரில் திளைத்து - தம்மிலே போர்புரிந்து அதிலே பயிறலின்; பாணி கலந்த அரி பறை அனுங்க ஆர்க்கும் மேகலைக் குரலோடு சிலம்பொலி ஈண்டி - தாளத்தோடு கலந்த பறைகெட ஒலிக்கும் மேகலைக் குரலோடே சிலம்பொலியுங் கூட; புரிக்குழல் புலம்ப வைகி - முறுக்குடைய குழல் குலைந்து தனிப்பத் தங்கி; பூவணை விடுக்கலான் - மலரணையை விடா தவனானான்.
|
|
(வி - ம்.) திளைத்து - திளைக்க. ஈண்டி - ஈண்ட. 'திளைத்த போர்' எனவும் பாடம்.
|
|
வரிக்கழல் - வரியையுடைய கழல். குருசில் : சீவகன். மடந்தை : சுரமஞ்சரி. திளைத்து - திளைப்ப. பாணி - தாளம். அரிப்பறை - அரித்தெழும் ஓசையையுடைய பறை என்க. அனுங்க - கெட.
|
( 88 ) |