பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1175 

   (வி - ம்.) அவன் மார்பு உற முயங்காமையின் பிறர் முயங்க வைத்தான் என்று கருதிப் பிணங்கினாள்.

   'மல்லலங் கங்கை போலும் பலர்முயங் காரமார்பிற் புல்லன்மின் போமின்' என்னுமிதனோடு ”பெண்ணியலா ரெல்லாருங் கண்ணிற் பொதுவுண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு” என்னும் திருக்குறளை (1311) ஒப்பு நோக்குக. ஊடன் மிகுதி தோன்றப் புல்லன்மின் போமின் வேண்டா என்று வற்புறுத்தோதினள்.

( 90 )
2085 வட்டிகைப் பாவை நோக்கி
  மகிழ்ந்திருந் திலிரோ வென்னாத்
தொட்டிமை யுருவந் தோன்றச்
  சுவரையே பொருந்தி நின்றாய்
கட்டழ குடைய நங்கை
  நீயெனக் கருதிக் கண்ணா
னொட்டியா னோக்கிற் றென்றா
  னொருபிடி நுசுப்பி னாட்கே.

   (இ - ள்.) வட்டிகைப் பாவை நோக்கி மகிழ்ந்திருந்திலிரோ என்னா - வட்டிகையால் சுவரில் எழுதிய பாவையை நோக்கி மகிழ்வுடன் இருந்திலிரோ என்று வினவ; ஒரு பிடி நுசுப்பினாட்கு - ஒரு பிடியளவு இடையாளுக்கு; தொட்டிமை உருவம் தோன்றச் சுவரையே பொருந்தி நின்றாய் - ஒற்றுமையாக நின்உருவம் விளங்கச் சுவரிலே பொருந்தி நின்றனை; கட்டழகுடைய நங்கை நீ எனக் கருதி - பேரழகுடைய நங்கையாகிய நீயே அவ்வுருவம் என்று நினைத்து; கண்ணால் ஒட்டி யான் நோக்கிற்று என்றான் - கண்ணால் ஒப்பிட்டு நோக்கினேன் என்றான்.

   (வி - ம்.) அவன்மார்புற முயங்காமையின் ஊடியவள் சுவரிலே பொருந்தி நின்றாளாக, அச் சுவரிலெழுதிய பாவை இவள் போலவே இருத்தலின் மயங்கிய அவன் இரண்டுருவினையும் ஒப்பிட்டுப்பார்த்தான். ஒப்பிட்டு நோக்கியபோது அவ்வோவியம் அழகுற இருப்பதாக எண்ணி நோக்கினானென்று மேலும் ஊடினாள்.

   நச்சினார்க்கினியர் அவளுருவம் பளிங்குச் சுவரிலே பொறித்ததனை யிவளென்று கருதி வணங்கினானென்றும், அதுகண்டு புலந்தாளென்றுங் கூறுவர். 'வட்டிகைப் பாவை' என்றும், 'சுவரையே பொருந்தி நின்றாய்' என்றும் வருவதால் அவர் உரை பொருந்தாது.

( 91 )
2086 நுண்டுகி னெகிழ்ந்த வல்குன்
  மணிபரந் திமைப்ப நொந்து
கண்களை யிடுகக் கோட்டிக்
  காமத்திற் செயிர்த்து நோக்கிக்