| நாமகள் இலம்பகம் |
118 |
|
|
கூறிய செல்வ நிலையாமையையும், உருத்திரதத்தன் கூறிய யாக்கை நிலையாமையையும் நிலையாமை என ஒருமையாக்கி 'அது' என ஒருமையாற் கூறினான். உரையல் என்றான் நிமித்திகனை நோக்கி, அவன் உரியன் ஆதலின்.
|
( 184 ) |
| 214 |
மூரித்தேந் தாரி னாய்நீ முனியினு முறுதி நோக்கிப் |
| |
பாரித்தேன் றரும நுண்ணூல் வழக்கது வாதல் கண்டே |
| |
வேரித்தேங் கோதை மாதர் விருந்துனக் காக வின்பம் |
| |
பூரித்தேந் திளைய கொங்கை புணர்கயான் போவ லென்றான். |
|
|
(இ - ள்.) மூரித்தேன் தாரினாய் - பெருமையுடைய தேன் பொருந்திய மாலையினாய்; தரும நுண்ணூல் வழக்குஅது ஆதல் கண்டு உறுதி நோக்கிப் பாரித்தேன் - நுண்ணிய அறநூலின் ஆணை இடித்துக் கூறல் அமைச்சர்க்கு இயல்பு என்பதை உணர்ந்து, நின்நலத்தை நோக்கி இதுவரை பரக்கக் கூறினேன்; வேரித்தேன் கோதை மாதர் பூரித்து ஏந்து இளைய கொங்கை விருந்து இன்பம் உனக்காகப் புணர் - மணமுறு தேன் பொருந்திய மாலையணிந்த மாதரின் பூரித்து ஏந்திய இளைய கொங்கையின் புதிய இன்பம் உனக்குக் கிடைக்குமாறு புணர்க ; நீ முனியினும் யான் போவல் என்றான் - நீ என்னை வெறுத்தாலும் (நின்தவறு காணாமல்) யான் துறவிடத்தே செல்வேன் என்று நிமித்திகன் கூறினான்.
|
|
|
(வி - ம்.) மூரி பண்பு மாத்திரம் உணர்த்தாது பெயராதலின், வேற்றுமைத் தொகை. முனியினும் என்பது எதிர்காலம் உணர்த்தும் எச்சம்; உம்மை ஐயம். 'இளைய கொங்கை' என்று இளமை நிலையாமை கூறினான். அரசன் போவென்னாமல் தானே போவேன் என்றல் நீதியின்மையின், துறவு உட்கோள் ஆயிற்று. 1இதனான், 'வெளிறிலாக் கேள்வியான்' (சீவக. 27) என்றார்.
|
|
|
'களிறனான்' (சீவக. 27) முதல் இத்துணையும் ஒரு தொடர்.
|
|
|
பாரித்தல் - மிக மிக விரித்துப் பேசுதல். 'தரும நுண்ணூல்' என்றது திருக்குறளை. அதன்கண் கூறப்படுவது.
|
|
| |
”அறிகொன் றறியான் எனினும் உறுதி |
|
| |
உழையிருந்தான் கூறல் கடன்” (குறள், 638) |
|
|
என்பது.
|
( 185 ) |
வேறு
|
|
| 215 |
இனமா மென்றுரைப் பினுமே தமெணான் |
| |
முனமா கியபான் மைமுளைத் தெழலாற் |
| |
புனமா மலர்வேய் நறும்பூங் குழலாண் |
| |
மனமா நெறியோ டியமன் னவனே. |
|
|
|
1. வெளிறிலாக் கேள்வியான் நிமித்திகனென நச்சினார்க்கினியர் கருதியது முற்கூறப்பட்டது.
|
|