பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 119 

   (இ - ள்.) புனமாமலர் வேய்நறும் பூங்குழலாள் மனம் ஆம் நெறிஓடிய மன்னவன் - முல்லை மலர்சூடிய மணமிகும் அழகிய குழலாள்பால் மனங்கொண்ட, அரச நெறிகெட்ட அரசன்; முனம் ஆகிய பான்மை முளைத்து எழலால் - முற்பிறப்பின் தீவினை முளைத்துத் தோன்றுதலாலே; இனம் ஆம்என்று உரைப்பினும் ஏதம் எணான் - நின் வேட்கை முற்கூறிய தேவர்களின் வேட்கைக்கு இனமானது என்று பின்னும் கூறினும் தனக்கு வரும் தீங்கை எண்ணாதவன் ஆனான்.

 

   (வி - ம்.) குழலாள் மனமாம் மன்னவன், நெறியோடிய மன்னவன் என இயைக்க.

 

   இனம் என்றது யான் முற்கூறிய தேவர் காமத்திற்கு இனம் என்றவாறு. எணான் - எண்ணான். பான்மை - ஊழ். ஈண்டுப் போகூழ். இச்செய்யுள் நூலாசிரியர் சச்சந்தனுக்கு இரங்கிக் கூறியது.

 
  ”ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று  
  சூழினும் தான்முந் துறும்”  

   என்றிரங்கினவாறு. நெறி - தனக்குரிய அரசியனெறி.

( 186 )
216 கலையார் துகிலேந் தல்குலுங் கதிர்சூழ்
முலையார் தடமும் முனியா துபடிந்
துலையாத் திருவின் னமிர்துண் டொளிசோ்
மலையார் மணிமார் பன்மகிழ்ந் தனனே.

   (இ - ள்.) திருவின் கலைஆர் துகில் ஏந்து அல்குலும் - விசயையின் மேகலையும் துகிலும் அணிந்த அல்குலையும்; கதிர்சூழ் முலைஆர் தடமும் - ஒளிவிடும் முலைத்தடத்தையும்; முனியாது படிந்து - வெறாது தோய்ந்து; உலையா அமிர்து உண்டு - கெடாத இளமைச் செவ்வியை நுகர்ந்து; ஒளிசேர் மணிமலைஆர் மார்பன் மகிழ்ந்தனன் - ஒளிபொருந்திய மலையனைய மார்பன் (வேறு மனக்கவலையின்றி) மகிழ்ந்தான்.

 

   (வி - ம்.) மலையார் : ஆர் : ஒத்த.

( 187 )
217 விரிமா மணிமா லைவிளங் குமுடித்
திருமா மணிசிந் துதிளைப் பினரா
யெரிமா மணிமார் பனுமேந் திழையு
மருமா மணிநா கரினா யினரே.

   (இ - ள்.) எரிமாமணி மார்பனும் ஏந்து இழையும் - ஒளி விடும் மணிமார்பனும் விளங்கும் பூணினளும்; விரிமா மணிமாலை விளங்குமுடித் திருமாமணி சிந்து திளைப்பினராய் - மார்பிற் கிடந்த விரிந்த மாமணி மாலையும் நீல மணிபோலும் மயிர்முடி