பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1194 

2109 பள்ளிவாய் நந்து மாமையும் பணித்துப்
  பன்மலர் வழிபடக் குறைக்கும்
வெள்ளநீர்ப் படப்பை விதையம்வந் தடைந்தே
  வேந்தனுக் குணர்த்தமுன் விடுத்தார்.

   (இ - ள்.) அள் இலைப் பலவின் அளிந்து வீழ் சுளையும் - செறிந்த இலையை உடைய பலவின் சுளையையும்; கனிந்து வீழ்வாழையின் பழனும் - கனிந்து வீழும் வாழைப்பழத்தையும்; புள்ளிவாழ் அலவன் பொறிவரிக் கமஞ்சூல் ஞெண்டினுக்கு உய்த்து - புள்ளியை உடையதாய் அங்கே வாழும் நண்டு, புள்ளியையும் வரியையும் உடைய நிறைந்த சூலையுடைய நண்டுக்குக் கொடுத்து; நோய் தணிப்பான் - அதன் வேட்கையைத் தணிப்பதற்கு; பள்ளிவாய் நந்தும் ஆமையும் பணித்து - தம்மிடத்திலே வாழும் நத்தையையும் ஆமையையும் மிதித்துக் கொண்டு; பல்மலர் வழிபடக் குறைக்கும் - பலமலர்களையும் வழியாம்படி குறைக்கின்ற; வெள்ளநீர்ப் படப்பை விதையம் வந்து அடைந்து - நீர்ப் பெருக்கையுடைய, தோட்டங்கள் சூழ்ந்த விதேக நாட்டைச் சேர்ந்து; வேந்தனுக்கு உணர்த்த முன் விடுத்தார் - அரசனுக்கு அறிவிக்க முன்னே ஆள் விட்டனர்.

   (வி - ம்.) அள் - செறிவு. பலவு - பலாமரம். பழன் - பழம். அலவன் - நண்டு. கமம் - நிறைவு. ஞெண்டு - நண்டு. பணித்து - மிதித்து, விதையம் - விதேகநாடு. வேந்தன் : கோவிந்தராசன்; விசையை உடன்பிறந்தோன்.

( 8 )
2110 வீட்டிடந் தோறும் வில்லக விரல்போற்
  பொருந்திநின் றொருங்கெதிர் கொள்கென்
றேட்டின்மேற் றீட்டித் திருவெழுத் திட்டாங்
  கிறைவனுந் தமர்களைப் பணிப்ப
நாட்டகத் தமிர்து நளிகட லமிர்து
  நல்வரை யமிர்தமு மல்லாக்
காட்டகத் தமிர்துங் காண்வரக் குவவிக்
  கண்ணகன் புறவெதிர் கொண்டார்.

   (இ - ள்.) இறைவனும் - அந்நாட்டு மன்னனும்; வீட்டிடந் தோறும் - வீட்டினிடந்தோறும்; வில்லக விரல்போல பொருந்தி நின்று - விற்பிடித்த விரல்போற் கிட்டி நின்று; ஒருங்கு எதிர் கொள்க என்று - ஒன்று சேர எதிர்கொள்கவென்று; ஏட்டின் மேல் தீட்டித் திருஎழுத்து இட்டுத் தமர்களை ஆங்குப் பணிப்ப - ஏட்டிலே எழுதிக் கைச்சாததிட்டுப் பணிபுரிவோரை ஆங்காங்