பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1202 

2126 மயிர்வாய்ச் சிறுகட் பெருஞ்செவி மாத்தாட்
செயிர்தீர் திரள்கைச் சிறுபிடி கேள்வ
னயிரா வணத்தொடு சூளுறு மைய
னுயிர்கா வலற்கொண் தெவநில் வென்பார்.

   (இ - ள்.) மயிர்வாய்ச் சிறுகண் பெருஞ்செவி மாத்தாள் செயிர்தீர் திரள்கைச் சிறுபிடி! - மயிர் பொருந்திய வாயையும் சிறு கண்களையும் பெருங் காதுகளையும் பெரிய தாள்களையும் குற்றமற்ற திரண்ட துதிக்கையையும் உடைய சிறுபிடியே!; கேள்வன் அயிராவணத்தொடு சூளுறும் - நின் கணவனாகிய அயிராவணத்தோடே சூள் உறுவேம்; ஐயன் உயிர்காவலற் கொண்டு உதவ நில் என்பார் - ஐயனாகிய உயிர் காவலனைக் கொண்டு அவன் எமக்கு உதவும்படி நிற்பாயாக என்பார்.

   (வி - ம்.) நில்லாவிடிற் சூளுறுவேம்; சூளுறாதபடிநில் என்றனர். 'சூளுறும்' பன்மைத் தன்மை வினைமுற்று; 'சேறும்' என்றாற் போன்று.

( 25 )
2127 கருனைக் கவளந் தருதுங் கமழ்தா
ரருமை யழகிற் கரசனை நாளைத்
திருமலி வீதியெஞ் சேரிக் கொணர்மோ
வெரிமணி மாலை யிளம்பிடி யென்பார்.

   (இ - ள்.) எரி மணி மாலை இளம்பிடி! - ஒளிவிடும் மணி மாலை அணிந்த இளம்பிடியே!; கமழ்தார் அருமை அழகிற்கு அரசனை - மணக்குந் தார் புனைந்த அரிய அழகின் தலைவனை; திருமலி வீதி எம் சேரிக் கொணர் - செல்வம் நிறைந்த தெருவையுடைய எம் சேரிக்குக் கொண்டுவருவாயாக! (கொணர்ந்தால்); கருனைக் கவளம் தருதும் - பொரிக்கறியை உடைய கவளத்தைக் கொடுப்போம்.; என்பர் - என்று வேண்டுவர்.

   (வி - ம்.) மோ : முன்னிலை அசை. கவளம் - யானை உணவு.

   கருனை - பொரிக்கறி, தருதும் : தன்மைப்பன்மை. அழகிற்கரசன் என்றது சீவகனை. பிடி : விளி.

( 26 )
2128 என்னோர் மருங்கினு மேத்தி யெரிமணிப்
பொன்னார் கலையினர் பொற்பூஞ் சிலம்பினர்
மின்னார் குழையினர் கோதையர் வீதியுண்
மன்ன குமரனை வாழ்த்தி மகிழ்ந்தார்.

   (இ - ள்.) பொன் ஆர் கலையினர் - பொன்னாலாகிய மேகலையினராய்; பொன் பூஞ்சிலம்பினர் - பூவேலை செய்த பொற்சிலம்பினராய்; மின் ஆர் குழையினர் - ஒளி பொருந்திய குழை