| மண்மகள் இலம்பகம் |
1203 |
|
|
|
யினராய்; கோதையர் - கோதையராய்; மருங்கின் என்னோரும் - அருகில் நின்ற எல்லோரும்; வீதியுள் மன்ன குமரனை ஏத்தி வாழ்த்தி மகிழ்ந்தார் தெருவிலே வந்த அரசகுமாரனைப் புகழ்ந்து வாழ்த்தி மகிழ்ந்தனர்.
|
|
(வி - ம்.) ஏத்தல் : புகழ்தல், வாழ்த்துதல் : பல்லாண்டு முதலியன கூறல்.
|
|
மருங்கின் என்னோரும் என மாறுக. என்னோரும் : எல்லோரும் : கலை : மேகலை. மன்னகுமரன் : சீவகன்.
|
( 27 ) |
வேறு
|
| 2129 |
விளங்குபாற் கடலிற் பொங்கி | |
வெண்டிரை யெழுவ வேபோற் | |
றுளங்கொளி மாடத் துச்சித் | |
துகிற்கொடி நுடங்கும் வீதி | |
யுளங்கழித் துருவப் பைந்தார் | |
மன்னவன் கோயில் சோ்ந்தா | |
னிளங்கதிர்ப் பருதி பௌவத் | |
திறுவரை யிருந்த தொத்தான். | |
|
|
(இ - ள்.) இளங்கதிர்ப் பருதி பௌவத்து இறுவரை இருந்தது ஒத்தான் - இளங்கதிரையுடைய ஞாயிறு கடலிலே உதயகிரியிலே இருந்த தன்மையைப் போன்றவன்; விளங்கு பாற்கடலின் பொங்கி வெண்திரை எழுவவே போல் விளங்குகின்ற பாற்கடலிலே பொங்கி வெண்மையான அலைகள் எழுவனபோல; துளங்கு ஒளி மாடத்து உச்சித் துகில் கொடி நுடங்கும் வீதி அசையும் ஒளியை யுடைய மாடங்களின் உச்சியிலே கொடியாடை அசையும் தெருவிலே ; உளம் கழித்து - நடுவே சென்று; உருவப் பைந்தார் மன்னவன் கோயில் சேர்ந்தான் - அழகிய பைந்தாரையுடைய வேந்தன் கோயிலை அடைந்தான்.
|
|
(வி - ம்.) ஒத்தான் : எழுவாய்; வெண்டிரை துகிற்கொடிக் குவமை. உளம் - நடுவிடம். கோயில் - அரண்மனை, பௌவம் : கடல். இறுவரை : தங்கும் மலை; ஈண்டுக் குணக்குன்று.
|
( 28 ) |
| 2130 |
இழையொளி பரந்த கோயி | |
லினமலர்க் குவளைப் பொற்பூ | |
விழைதகு கமல வட்டத் | |
திடைவிராய்ப் பூத்த வேபோற் | |
|