| மண்மகள் இலம்பகம் |
1207 |
|
|
|
கொண்டு இவர் கூறினாலும் நூலாசிரியர் கருத்து அதுவன்று என்பதற்குச் சொற்கிடக்கையே சான்றாம். மேலம், புனைந்துரைப்பதில் வானவர் வருந்தும்படி அமிர்த கலசம் இவ்வுலகிற் போந்து இவள் மார்பிலே தோன்றின என்பதனாற் குற்றம் என்னோ?
|
( 33 ) |
| 2135 |
மைதோய் வரையி னிழியும்புலி | |
போல மைந்தன் | |
பெய்தாம மாலைப் பிடியின்னிழிந் | |
தேகி மன்னர் | |
கொய்தாம மாலைக் கொழும்பொன்முடி | |
தேய்த்தி லங்குஞ் | |
செய்பூங் கழலைக் தொழுதான்சென்னி | |
சோ்த்தி னானே. | |
|
|
(இ - ள்.) மைந்தன் - சீவகன்; மைதோய் வரையின் இழியும் புலி போல - முகில் தோயும் மலையிலிருந்து இழியும் புலியைப் போல; பெய்தாம மாலைப் பிடியின் இழிந்து ஏகி - பெய்த தாமமாகிய மாலை அணிந்த பிடியினின்றும் இறங்கிச் சென்று; மன்னர் கொய்தாம மாலைக் கொழும்பொன் முடிதேய்த்து இலங்கும் - அரசர்களின் கொய்த ஒழுங்குபட்ட மாலை யணிந்த கொழுவிய பொன்முடிகள் தேய்த்து விளங்கும்; செய் பூங்கழலை - (கோவிந்தனுடைய) பண்ணப்பட்ட அழகிய கழலை; தொழுதான் சென்னி சேர்த்தினான் - தொழுது தன் முடியிலே சேர்த்தான்.
|
|
(வி - ம்.) கழல் : அடியை உணர்த்தலின் தானி ஆகுபெயர்.
|
|
மை - முகில், வரை - மலை; யானையினின்றும் இறங்கும் சீவகனுக்கு மலையினின்றி றங்கும் புலி உவமை தொழுதான்; முற்றெச்சம்.
|
( 34 ) |
| 2136 |
பொன்னாங் குவட்டிற் பொலிவெய்தித் திரண்ட திண்டோன் | |
மன்னன் மகிழ்ந்து மருமானை விடாது புல்லித் | |
தன்னன்பு கூரத் தடந்தாமரைச் செங்கண் முத்த | |
மின்னும் மணிப்பூண் விரைமார்ப நனைப்ப நின்றான். | |
|
|
(இ - ள்.) பொன் அம் குவட்டின் பொலிவு எய்தித் திரண்ட திண்தோள் மன்னன் - பொன் மலை யெனப் பொலிவு பெற்றுத் திரண்ட வலிய தோளையுடைய மன்னன்; மகிழ்ந்து - களித்து; மருமானை விடாது புல்லி - மருமகனை விடாது தழுவி; தன் அன்பு கூர - தன் அன்பு மிகுதலால்; தடந் தாமரைச் செங்கண் முத்தம் - பெரிய தாமரை மலரனைய கண்களிலிருந்து வரம் முத்தனைய கண்ணீர்; மின்னும் மணிப்பூண் விரை
|