| மண்மகள் இலம்பகம் | 
1208  | 
 | 
  | 
| 
 மார்பம் நனைப்ப நின்றான் - சீவகனுடைய விளங்கும் மணிக்கலன் அணிந்த, மணங் கமழும் மார்பை நனைக்குமாறு நின்றான். 
 | 
| 
    (வி - ம்.) பொன்னங்குவடு - பொன்மலை. மன்னன் - ஈண்டுக் கோவிந்தன். மருமான் என்றது சீவகனை. உடன் பிறந்தாள் மகனாதலின் அங்ஙனம் கூறினர் . செங்கண் முத்தம் - கண்ணீர்த்துளி. விரை - மணம். 
 | 
( 35 ) | 
| 2137 | 
ஆனாது வேந்தன் கலுழ்ந்தானெனக் கோயி லெல்லாந் |   | 
தானாது மின்றி மயங்கித்தடங் கண்பெய்ம் மாரி |   | 
தேனார் மலா¦ர்த் தொழுகச்சிலம் பிற்சி லம்புங் |   | 
கானார் மயிலின் கணம்போற்கலுழ் வுற்ற தன்றே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) வேந்தன் ஆனாது கலுழ்ந்தான் என - அரசன் அமைவின்றி அழுதான் எனக் கருதி; கோயில் எல்லாம் - அரண்மனை முழுதும்; தான் ஆதும் இன்றி மயங்கி - தானெனுந் தன்மை சிறிதும் இல்லாமல் மயங்கி; தடம் கண் பெய்மாரி தேன் ஆர் மலர் ஈர்த்து ஒழுக - பெரிய கண்கள் பெய்யும் மழை தேன் பொருந்திய மலர்களை யிழுத்து ஒழுகும்படி; சிலம்பில் சிலம்பும் கான் ஆர் மயிலின் கணம்போல் - மலையில் ஆரவாரிக்கும் காட்டு மயிலின் திரள் போல; கலுழ்வுற்றது - அழுதலுற்றது. 
 | 
| 
    (வி - ம்.) உற்றது : ஒருமை பன்மை மயக்கம். 'தான் ஆதும் இன்றி மயங்கி' என்பதை வேந்தனுக் காக்குவர் நச்சினார்க்கினியர். 'கானார் சிலம்பு' எனவுங் கூட்டுவர். 
 | 
( 36 ) | 
வேறு
 | 
| 2138 | 
பகைநரம் பிசையுங் கேளாப் பைங்கதிர்ப் பசும்பொற்கோயில் |   | 
வகைநலம் வாடி யெங்கு மழுகுரன் மயங்கி முந்நீ |   | 
ரகமடை திறந்த தேபோ லலறக்கோக் கிளைய நங்கை |   | 
மிகைநலத் தேவி தானே விலாவணை நீக்கி னாளே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) பகை நரம்பு இசையும் கேளா நரம்பிசையிலே பகையும் கேட்டறியாத; பைங்கதிர்ப் பசும்பொன் கோயில் - ஒளிவிடும் பொற் கோயிலில் உள்ளார்; (சச்சந்தன் தன்மையைக் கேட்டலின்); வகைநலம் வாடி - வகைப்பட்ட அழகு வாடி; எங்கும் அழுகுரல் மயங்கி - எல்லாவிடத்தும் அழுகுரல் கலந்து; முந்நீர் அகமடை திறந்ததே போல் - கடலின் உளமடை திறந்தாற்போல; - அலற - அலறலின்; கோக்கு இளைய நங்கை - அரசனுக்கு இளைய நங்கையாகிய; மிகை நலத் தேவி - மேம்பட்ட பண்பையுடைய விசயை; தானே விலாவணை நீக்கினாள் - தானே அழுகையை நீக்கினாள். 
 |