பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1210 

நீங்க - உயர்ந்த தவிசின் அருகே (அவற்றை) வைத்துவிட்டுச் செல்ல; எண்ணம் கொள்வான் - சிந்தித்தற் பொருட்டு; பெருமகன் அமைச்சரோடு ஏறினான் - சீவகனும் மந்திரிகளுடன் கட்டிலில் அமர்ந்தான்.

   (வி - ம்.) 'காஞ்சனக் கவரி' என்று பாடமாயின் பொற்காம்பிட்ட கவரி என்க.

   அடைப்பை - வெற்றிலைப்பை. படியகம் - படிக்கம்; காளாஞ்சி. கஞ்சனை - கலசப்பானை. கவரி - சாமரை. தவிசடுத்து வைத்து நீங்க என மாறுக. எண்ணங் கொள்ளல் - எண்ணித் துணிதல்.

( 39 )
2141 உலந்தநா ளவர்க்குத் தோன்றா
  தொளிக்குமீன் குளிக்குங் கற்பிற்
புலந்தவே னெடுங்கட் செவ்வாய்ப்
  புதவிநாட் பயந்த நம்பி
சிலம்புநீர்க் கடலந் தானைச்
  சீதத்தற் கரசு நாட்டிக்
குலந்தரு கொற்ற வேலான்
  கொடிநகர் காக்க வென்றான்.

   (இ - ள்.) உலந்த நாளவர்க்குத் தோன்றாது - முடிந்த வாழ் நாளுடையவர்க்குத் தெரியாமல்; ஒளிக்கும் மீன் குளிக்கும் கற்பின் - மறையும் அருந்ததி என்னும் மீனும் தோற்குங் கற்பினையுடைய; வேல் புலந்த நெடுங்கண் செவ்வாய்ப் புதவி நாள் பயந்த நம்பி - வேலை வெறுத்த நீண்ட கண்களையும் செவ்வாயையும் உடைய புதவி என்னும் அரசி பெற்ற நம்பியாகிய; சிலம்பும் நீர்க் கடல் அம் தானைச் சீதத்தற்கு அரசு நாட்டி - ஒலிக்கும் நீரையுடைய கடல் போன்ற படைகளையுடைய சீதத்தனுக்கு அரசை நல்கி; குலம் தருகொற்ற வேலான் கொடிநகர் காக்க என்றான் - குலத்தைக் காக்கும் வெற்றி வேலானாகிய கோவிந்தன் 'நீ இந் நகரைக் காத்திடுக' என்று பணித்தான்.

   (வி - ம்.) புதவி; கோவிந்தன் மனைவி. சீதத்தன்; கோவிந்தன் மகன். குலந்தருதல் - மக்களைப் பெற்றுக் குலத்தை வளர்த்தல். தான் அக் கடன் கழித்துப் போர் செய்து படக் கருதுதலின், அதற்கு அமைச்சர் உடன்படார் என்று, அவரை வினவாமல் தானே அரசளித்தான் : 'வீறு சால் புதல்வற் பெற்றனை யிவணர்க் - கருங்கடன் இறுத்த செருப்புகல் முன்ப ' (பதிற். 77) என்றாற் போல.

( 40 )
2142 மாற்றவ னொற்ற ரொற்றா
  வகையினின் மறைய நம்பிக்
காற்றின் தோழர்க் கெல்லா
  மணிகல மடிசி லாடை