| மண்மகள் இலம்பகம் |
1216 |
|
|
|
நீவிர் முன்னிருந்த பகையை) விட்டு நீரும் நெல்லும் பொன்னும் அந் நாட்டுடன் வழங்குவீராக; விளைவ கூறின் இறைவன் ஒட்டலன் - மேல் வருவன இவையென யாவரேனும் உரைத்தால் அரசன் ஒவ்வான்; சொன்னீர் நாநும அல்ல - அவ்வாறு மொழிந்தீராயின் நா நும்முடையன அல்ல; என்ன - என்று; தடம்கண் வள்வவார்க் குளிறு இடி முரசம் கொட்டினான் - பெரிய பக்கத்தினையும் இறுக்கிய வாரையுமுடைய. முழங்கும் இடியனைய ஒலியை உடைய முரசத்தை வள்ளுவன் அறைந்தான்.
|
|
(வி - ம்.) 'சொன்னீர் : அறிவுடையார் அறிவிலார்க்கு இதனைக் கூறுவீராக' என்று நச்சினார்க்கினியர் கூறுவர். இங்ஙனம் அரசன் ஆணை என்று முரசறைவோன் அறைந்தான். முரசறைவோன் கூற்றெனிற் பகைமையைக் கூறினானாம்.
|
( 49 ) |
| 2151 |
விண்டவ ருடலங் கீறிச் | |
சுளித்துநின் றழலும் வேழ | |
மொண்கொடி யுருவத் திண்டே | |
ரொளிமயிர்ப் புரவி பண்ணி | |
வண்கழ லணிந்து மள்ளர் | |
வாள்வலம் பிடித்து நாளைத் | |
தெண்டிரைப் பரப்பு நாணத் | |
திருநகர்த் தொகுக வென்றான். | |
|
|
(இ - ள்.) மள்ளர் - வீரர்கள்; விண்டவர் உடலம் கீறிச் சுளித்து நின்று அழலும் வேழம் - பகைவர் உடலைப் பிளந்து சினந்து நின்று சீறும் வேழமும்; ஒண்கொடி உருவத் திண்தேர் - சிறந்த கொடியை அணிந்த அழகிய திண்ணிய தேரும்; ஒளி மயிர்ப் புரவி - விளங்கும் மயிரையுடைய குதிரையும் ஆகியவற்றை ; பண்ணி - பண்ணுறுத்தி; வண்கழல் அணிந்து - சிறந்த வீரக் கழலை அணிந்து ; வாள்வலம் பிடித்து - வாளை வலக்கையில் ஏந்தி; தெண்திரைப் பரப்பு நாண - தௌ்ளிய அலைகளையுடைய கடலும் வெள்குமாறு; நாளைத் திருநகர்த் தொகுக என்றான் - நாளைக்கு நம் அழகிய நகரிலே திரள்க என்று முரசு அறைந்தான்.
|
|
(வி - ம்.) விண்டவர் - பகைவர். உடலம் - உடல். சுளித்து - மாறுபட்டு. பண்ணி - பண்ணுறுத்தி; ஒப்பனைசெய்து.
|
( 50 ) |
| 2152 |
ஏற்றுரி போர்த்த வள்வா | |
ரிடிமுர சறைந்த பின்னாட் | |
காற்றெறி கடலிற் சங்கு | |
முழவமு முரசு மார்ப்பக் | |
|