| மண்மகள் இலம்பகம் | 
1218  | 
 | 
  | 
| 
    (வி - ம்.) புதையிருள் : வினைத்தொகை. இரிய - கெட்டோட, குங்குமம் - செந்நிறம். உதையம் - உதயகிரி. சுதை - வெண்சாந்தம். வேந்தன் - கோவிந்தன். விழுப்படை - சிறந்த படை. 
 | 
( 52 ) | 
வேறு
 | 
| 2154 | 
அரும்பனைத் தடக்கை யபரகாத் திரம்வாய் |   | 
  வாலெயி றைந்தினுங் கொல்வ |   | 
கருங்கடற் சங்குங் கறந்தவான் பாலுங் |   | 
  கனற்றிய காலுகி ருடைய |   | 
பெரும்புலி முழக்கின் மாறெதிர் முழங்கிப் |   | 
  பெருவரை கீண்டிடுந் திறல |   | 
திருந்தியே ழுறுப்புந் திண்ணிலந் தோய்வ |   | 
  தீயுமிழ் தறுகணிற் சிறந்த. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) அரும் பனைத் தடக்கை அபரகாத்திரம் வாய்வால் எயிறு ஐந்தினும் கொல்வ - அரிய பனை போன்ற பெரிய கையும், பின்காலும், வாயும் , வாலும், தந்தமும் என்னும் ஐந்தினுலும் கொல்வன; கருங்கடல் சங்கும் கறந்த ஆன்பாலும் கனற்றிய கால் உகிர் உடைய - கரிய கடலிலே உள்ள சங்கையும் பசுவின் பாலையும் வருத்திய கால் நகங்களை உடையன; பெரும்புலி முழக்கின் மாறு எதிர் முழங்கிப் பெருவரை கீண்டிடும் திறல - பெரிய புலி முழங்கினால் மாறுபட்டு எதிரே முழங்கி. உயர்ந்த மலையைப் பிளக்கும் வலியன; ஏழுறுப்பும் திருந்தித் திண்நிலம் தோய்வ - ஏழுறுப்புக்களும் அழகுற்றுத் திண்ணிய நிலத்திலே தோய்வன; தீ உமிழ் தறுகணின் சிறந்த - நெருப்பை உமிழும் அஞ்சாத கண்களையுடைய சிறப்பின; 
 | 
| 
    (வி - ம்.) இதுவும் அடுத்த செய்யுளும் ஒரு தொடர். 
 | 
| 
    ஏழும் திருந்தி என்க. ஏழுறுப்புக்களாவன : கால்கள் நான்கும், துதிக்கையும், வாலும், கோசமும், நச்சினார்க்கினியர், 'ஏழு முழமும் திருந்தி நிலம்தோயும் உறுப்புமூன்றும் (துதிக்கையும் வாலும் கோசமும்) நிலந்தோய்வன' என்பர். 
 | 
( 53 ) | 
| 2155 | 
கவிழ்மணிப் புடைய கண்ணிழ னாறிற் |   | 
  கனன்றுதந் நிழலொடு மலைவ |   | 
வவிழ்புயன் மேக மனையமம் மதத்த |   | 
  வறுபதிற் றறுபதா நாகம் |   | 
புகழ்பருந் தார்ப்பப் பூமதம் பொழிவா |   | 
  னின்றன விராயிரங் கவுள்வண் |   | 
டிகழ்மதஞ் செறித்த விராயிரத் தைஞ்ஞூ |   | 
  றிளையவு மத்துணைக் களிறே. |   | 
 
 
 |