| மண்மகள் இலம்பகம் |
1219 |
|
|
|
(இ - ள்.) கவிழ் மணிப்புடைய - கவிழ்ந்த மணிகளை இரு பக்கத்தினும் உடையன; கண் நிழல் நாறின் கனன்று தம் நிழலொடு மலைவ - தம் கண்களில் தம் நிழல் தோன்றின் சினந்து தம் நிழலுடன் மலைவன; அவிழ் புயல் மேகம் அனைய மும்மதத்த - சொரிகின்ற நீரையுடைய முகில் போன்ற மும்மதமுடையன; அறுபதிற்று அறுபதாம் நாகம் - (ஆகிய) மூவாயிரத்தறுநூறு யானைகள்; புகழ் பருந்து ஆர்ப்பப் பூமதம் பொழிவான் நின்றன இராயிரம் - புகழும் பருந்தும் ஒலிக்க மதம் பொழிதற்கு நின்றன இரண்டாயிரம் களிறுகள்; கவுள் வண்டு இகழ் மதம் செறித்த இராயிரத்து ஐஞ்ஞூறு - கவுளை வண்டு இகழும்படி மதம் அடைத்தன இரண்டாயிரத்து ஐஞ்ஞூறு - களிறுகள்; இளையவும் அத்துணைக் களிறு - களிற்றுக் கன்றுகளும் இரண்டாயிரத்தைஞ்ஞூறு.
|
|
(வி - ம்.) ஆக யானை பதினாயிரத்தறுநூறு.
|
|
கவிழ்மணி : வினைத்தொகை. நாறுதல் - தோன்றுதல். அவிழ்புயல் : வினைத்தொகை. நாகம் - யானை. புகழும் பருந்தும் ஆர்ப்ப என்க. பூமணக்கும் மதம் என்க.
|
( 54 ) |
| 2156 |
குந்தமே யயில்வாள் குனிசிலை மூன்றுங் | |
குறைவிலார் கூற்றொடும் பொருவா | |
ரந்தர மாறா யானைகொண் டேறப் | |
பறக்கெனிற் பறந்திடுந் திறலார் | |
முந்தமர் தம்முண் முழுமெயு மிரும்பு | |
மேய்ந்திட வெஞ்சமம் விளைத்தார் | |
கொந்தழ லஞ்சாக் குஞ்சர மிவர்ந்தார் | |
கோடியே விருத்தியா வுடையார். | |
|
|
(இ - ள்.) கொந்து அழல் அஞ்சாக் குஞ்சரம் இவர்ந்தார் - எரியும் தீக்கும் அஞ்சாத களிறுகளின் மேல் ஏறிச் செலுத்துவோர்; குந்தமே அயில்வாள் குனிசிலை மூன்றும் குறைவிலார் - எறிகோலும் கூரிய வாளும் வளைந்த வில்லும் ஆகிய மூன்றினும் சிறந்த பயிற்சியுடையார்; கூற்றொடும் பொருவார் - கூற்றுவனுடனும் போர் செய்யுந் திறலார்; அந்தரம் ஆறா யானை கொண்டு ஏறப் பறக்க எனின் பறந்திடும் திறலார் - வான வழியாக ஏறும் படி யானையைக் கொண்டு பறக்க என்னின் பறக்கும் ஆற்றலுடையார்; முந்து அமர் தம்முள் முழுமெயும் இரும்பு மேய்ந்திட வெம் சமம் விளைத்தார் - முற்செய்த போர்களிலே மெய்ம் முழுதும் இரும்பு மேயும்படி கொடிய போரை விளைத்தவர்; கோடியே விருத்தியா உடையார் - கோடி பொன்னை வாழ்க்கை ஊதியமாகக் கொண்டவர்.
|