பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1223 

2162 இன்ன பொங்குளைப் புரவிபண் ணுறுத்தன வியறோ்
பொன்னும் வெள்ளியு மணியினும் பொலிந்து வெண் மதியத்
தன்னை யூர்கொண்ட தகையன தொகைசொலி னறுநூ
றென்னு மீறுடை யிருபதி னாயிர மிறையே.

   (இ - ள்.) இறையே! - அரசே!; இன்ன பொங்கு உளைப்புரவி பண் உறுத்தன இயல் தேர் - இத் தன்மைய பொங்கும் உளையையுடைய புரவிகளாற் பண்ணுறுத்தப்பட்டன ஆகிய விளங்கும் தேர்கள்; பொன்னும் வெள்ளியும் மணியினும் பொலிந்து - பொன்னாலும் வெள்ளியினாலும் மணியினாலும் பொலிவுற்று; வெண்மதியம் தன்னை ஊர் கொண்ட தகையன - வெண் திங்களை ஊர்கோள் கொண்ட தன்மையன; தொகை சொலின் அறுநூறு என்னும் ஈறு உடை இருபதினாயிரம் எண்ணிக்கை கூறின் இருபதினாயிரத் தறுநூறு.

   (வி - ம்.) மதி குறட்டிற்கும்; ஊர் கோள் சூட்டிற்கும் உவமம் இன்ன - இத்தன்மையுடையன. உளை - பிடரிமயிர். இறை : விளி.

( 61 )
2163 நொச்சி மாமலர் நிறத்தன நொடிவரு முந்நீ
ருச்சி மாக்கதிர் போற்சுடு மொளிதிக ழயில்வா
ளெச்சத் தல்லவு மெறிபடை பயின்றுதம் மொன்னார்
நிச்சங் கூற்றினுக் கிடுபவர் தோ்மிசை யவரே.

   (இ - ள்.) தேர் மிசையவர் - அத் தேரில் உள்ள வீரர்கள் நொச்சி மாமலர் நிறத்தன நொடி வரும் முந்நீர் உச்சி மாக்கதிர் போற் சுடும் - புகரால் நொச்சி மலர் போலும் நிறத்தனவாய்; கூறற்குரிய கடலை உச்சியிலிருந்து சுடுகின்ற ஞாயிறுபோற் சுடுகின்ற; ஒளி திகழ் அயில்வாள் - ஒளியால் விளங்கும் கூரிய வாளையும்; எச்சத்து அல்லவும் எறிபடை பயின்று - கூறாமல் விட்ட பிற எறி படைகளையும் பழகி; தம் ஒன்னார் நிச்சம் கூற்றினுக்கு இடுபவர் - தம் பகைவரை உறுதியாகக் கூற்றுவனுக்குக் கொடுப்பவர்.

   (வி - ம்.) 'எச்சத்து நொடிவரும்' என இயைப்பர் நச்சினார்க்கினியர். இந்த நான்கு பாட்டுக்களும் தேரையும் தேர்க்குதிரையையும் தேர் வீரரையும் பற்றிக் கூறின.

( 62 )

வேறு

2164 எயிற்றுப்படை யாண்மையினி
  னிடிக்கும்புலி யொப்பார்
பயிற்றியவில் வாள்பணிக்கும்
  வேலோடுடன் வல்லார்