பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1231 

   (வி - ம்.) பெருமகன் என்றது கோவிந்தனை. பாவை : இலக்கணை. பித்திகைப் பிணையல் - பிச்சி மலர்மாலை. போகொடாத என்றும் பாடம். திருமகள் : உவமவாகுபெயர். பாலான் - ஊழ்வகையாற் கணவன் ஆகுமவன். திரிபன்றி - பன்றி வடிவமுடையதொரு பொறி. திரிபன்றி எய்தவனுக்கு இலக்கணை மனைவியாவாள் என்றவாறு.

( 76 )
2178 ஆய்மதக் களிறு திண்டே ரணிமணிப் புரவி யம்பொற்
காய்கதிர்ச் சிவிகை செற்றிக் கலந்த வைநுரைக ளாகத்
தோய்மழை யுலக வெள்ளந்தொன்னகர்த் தொக்க தேபோ
லாய்முடி யரச வெள்ள மணிநக ரீண்டிற் றன்றே.

   (இ - ள்.) தோய் மழை உலக வெள்ளம் தொல் நகர்த் தொக்கதே போல் - செறிந்த நீரையுடைய, உலகைக் கொள்ளும் வெள்ளம் பழமையான அந்நகரிலே கூடியதைப்போல; ஆய்முடி அரச வெள்ளம் - அழகிய முடியையுடைய அரசரின் வெள்ளம்; ஆய் மதக் களிறு திண்தேர் அணிமணிப் புரவி அம் பொன்காய் கதிர்ச் சிவிகை செற்றி - ஆராய்ந்த மத யானையும் திண்ணிய தேரும் அழகிய மணிகள் ஒலிக்கும் புரவியும் பொன்னாலாகிய ஒளி விடுங் கதிர்களையுடைய சிவிகையும் ஆகியவற்றை நெருக்கி; கலந்தவை நுரைகளாக - கலந்தவற்றை நுரைகளாகக் கொண்டு, அணிநகர் ஈண்டிற்று - அழகிய நகரிலே கூடியது.

   (வி - ம்.) செற்றி - நெருக்கி. தோய்மழை : வினைத்தொகை; உலகத்தை அழிக்கும் ஊழிவெள்ளம் என்க. தொன்னகர் - ஈண்டு இராசமாபுரம்.

( 77 )
2179 நல்லவள் வனப்பு வாங்க
  நகைமணி மாலை மார்பர்
வில்லன்றே யுவனிப் பாரும்
  வெங்கணை திருத்து வாரும்
சொல்லுமி னெமக்கு மாங்கோர்
  சிலைதொட நாளென் பாரும்
பல்சரம் வழங்கு வாரும்
  பரிவுகொள் பவரு மானார்.

   (இ - ள்.) நல்லவள் வனப்பு வாங்க - இலக்கணையின் அழகு தமது மனத்தைக் கவர்தலால் ; நகை மணிமாலை மார்பர் - ஒளி பொருந்திய மணிமாலை அணிந்த மார்பாகிய அவ்வரசர்கள்; அன்றே வில் உவனிப்பாரும் - அப்போதே வில்லை எய்யத் தொடங்குவாரும்; வெங்கணை திருத்துவாரும் - கொடிய அம்புகளைச் செம்மைப்படுத்துவாரும் ; எமக்கும் ஆங்கு ஓர் சிலைதொட நாள் சொல்லுமின் என்பாரும் - எங்கட்கும் அவ்விடத்தே