| மண்மகள் இலம்பகம் |
1233 |
|
|
|
எழுதி - நிமிர்ந்த அழகிய தன்மார்பிலே சாந்தினாலே கொடியாக எழுதி; காதில் காய்ந்து எரி செம்பொன் தோடும் கனமணிக் குழையும் மின்ன - காதுகளில் அழன்று ஒளிவிடும் பொன் தோடும் மணிக் குழையும் விளங்க; வெஞ்சிலை தளர வாங்கி - கொடிய வில்லைத் தளர வளைத்து, ஆய்ந்த பொன் பன்றி நெற்றி அருந்துகள் ஆர்ப்ப எய்தான் - அழகிய அப் பொற் பன்றியின் நெற்றியிலே அம்பு பட்டுத் துகளுண்டாக அடித்தான்;
|
|
(வி - ம்.) வினிதை - ஒருநாடு. தளர - நன்கு வளைய. அருந்துகள் - துண்டுகள்
|
( 80 ) |
| 2182 |
குடர்தொடர் குருதிக் கோட்டுக் | |
குஞ்சர நகரத் தார்கோன் | |
சுடர்நுதற் பட்ட மின்னச் | |
சுரும்பிமிர் கண்ணி சிந்த | |
வடர்கதிர்ப் பைம்பொற் பூணு | |
மாரமு மகலத் தொல்கப் | |
படர்சிலை குழைய வாங்கிப் | |
பன்றியைப் பதைப்ப வெய்தான். | |
|
|
(இ - ள்.) குடர்தொடர் குருதிக் கோட்டுக் குஞ்சர நகரத்தார் கோன் - குடரைப் பிணித்த குருதிக் கொம்பினையுடைய அத்தினபுர மன்னன்; சுடர்நுதல் பட்டம் மின்ன - ஒளிரும் நெற்றியிலே பட்டம் மின்னவும்; சுரும்பு இமிர் கண்ணி சிந்த - வண்டுகள் முரலும் கண்ணி சிதறவும்; அடர்கதிர்ப் பைம்பொன் பூணும் - செறிந்த கதிரையுடைய பொன்னணியும், ஆரமும் அகலத்து ஒல்க - மாலையும் மார்பில் அசைய; படர்சிலை குழைய வாங்கி துன்பம் ஊட்டும் வில் குழைய வளைத்து; பன்றியைப் பதைப்ப எய்தான் - பன்றி அசைய அடித்தான்.
|
|
(வி - ம்.) குஞ்சரம் என்ற பெயர்க்கு அடையாகக், 'குடர்தொடர் குருதிக்கோடு' வந்தது; நகரத்திற்கு அன்று.
|
( 81 ) |
| 2183 |
வார்மதுத் துளிக்கு மாலை | |
மணிமுடித் தொடுத்து நாலக் | |
கார்மதங் கடந்த வண்கைக் | |
காம்பிலிக் காவன் மன்ன | |
னோ்மதக் கேழ லெய்வா | |
னேறலும் பொறியி னேறுண் | |
டார்மதக் களிற்று வேந்தர்க் | |
கருநகை யாக வீழ்ந்தான். | |
|